பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

முன்பு மருதாம்பாள் பஸ் ஏறிய இடத்திலேயே இறங்கி, விடுகிறாள். அப்போது முகங்கள் தெளிவாகத் தெரியாமல் மங்கும் நேரம். அவர்கள் லாரிகளும் பஸ்களும் போகும். கடைத் தெருவைத் தாண்டி நடக்கின்றனர். அவர்கள் ஊர். மாதா கோயிலைவிடப் பெரிதாக ஒரு மாதாகோயில் உச்சியில் விளக்கொளிரத் தெரிகிறது. l

மருதாம்பா கடையில் பொட்டுக்கடலையும் மொந்தன் பழமும் வாங்கிக் கொள்கிறாள். அந்தத் தெருக்களைத் தாண்டி, மணலும் முட்செடிகளுமான பரப்பைக் கடந்து, வேறு தெருக்கள் வழியே நடக்கின்றனர். ஒழுங்கில்லாத வீடுகள். சில வீடுகள் மஞ்சள் வண்ணச்கவர்களும், மூங்கில் பிளாச்சு கேட்டு மாகப் புதியவை என்று பறை சாற்று கின்றன. இடை இடையே சாக்கடை, குப்பை மேடு, கடை, ஒட்டுவில்லை வீடுகள், தென்னங்கிடுகுகளான தடுப்புக்கள். இடைவிடாது எதிரே குறுக்கிடும் சைக்கிள் ஒலிகள் ஆகிய காட்சிகளை வியப்புடன் பார்த்துக் கொண்டு அவர்கள் நடக்கின்றனர்.

பொன்னாச்சி தனது இரண்டொரு துணிகளையும், தம்பியின் சராயையும் ஒரு கித்தான், பைக்குள் வைத்து எடுத்துக் கொண்டிருக்கிறாள். அவள் சிறுமியாகத் தாயுடன் துர்த்துக்குடியில் வாழ்ந்த காலத்து வீட்டை நினைவுக்குக் கொண்டுவர முயலுகிறாள். அதை கோல்டன்புரம் என்று சொல்வார்கள். எதிரே முட்செடிக் காடாக இருக்கும். அவள் வீட்டு வாயிலில் தம்பியைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பாள். அவள் அம்மா தண்ணிர் கொண்டு வரப் போவாள். லாரி வாசலில் வரும். லாரியில் இருந்து தலையில் துவாலை கட்டிக் கொண்டு ஒருவர் வந்து உள்ளே யிருந்து மண்வெட்டியையும், கூடையையும் எடுத்துப் போவார். அவர் அப்பச்சி அவரிடம் அவளுக்கு மிகவும் பயம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/37&oldid=657524" இலிருந்து மீள்விக்கப்பட்டது