பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் - 43

“ஆமா. பய இல்லாட்டி இங்கன கவு.முத்து புளியமுத்து ஆடப்போயிருவா கெட்ட சகவாசமெல்லாஞ் சேந்திடும்...” என்றவள் பாஞ்சாலியைத் தண்ணிர் கொண்டுவரச் சொல்லி மூலையில் வாய் கொப்ளிக்கிறாள். காரிக் காரி உமிழ்கிறான்.

“நீங்க ஏதானும் சோலி வாங்கிக் குடுத்தா, ரொம்ப தயவா இருக்கும். ஆச்சி, சின்ன்ம்மாவுக்கு நாங்க பாரமா இருக்கண்டா...’ ஆச்சி சேலை முன்றானையை அவிழ்த்து முகத்தைத் துடைத்துக் கொள்கிறாள்.

சோலி இப்ப கெடக்காம இல்ல. பணஞ்சோல” அளத்துலியே சொல்லி வாங்கித்தார. அறவக் கொட்ட டி. பிலோ. எங்கோ தம்பிக்கும், ஒனக்கும் கூடக் கெடய்க்கும், பணஞ்சோல அளத்துல வேல கெடக்கிறது. செரமம். அங்க கங்காணி மொறயில்ல. கண்ட்ராக்டு, ஒங்க சின்னாச்சி, அப்பன் சோலியெடுத்த அளம் சின்னது. கங்காணிமாரு கெடுபிடி ரொம்ப இருக்கும், நிர்ணயக் கூலின்னு சொல்லுவா. ஆனா கங்காணி வாரத்துக்கு ஒருரூபா புடிச்சிட்டுத்தா குடுப்பா. பொறவு அட்வான்சு, போனக ஒண்ணு கெடையாது. அப்புசி மழை விழுந்திட்டா வேலபு மில்ல. வேல நேரம்னு கண்டிப்புக் கெடையாது. ஏ. குடிக்கத் தண்ணிகூடக் கெடையாது. பனஞ்சோல அளம் அப்பிடில்,ை பெt...க மூவாயிரம் ஏக்கர். வேலக்கி எடுக்கையிை அட்வான்சு குடுப்பா பொறவு தீவாளி சமயத்தில நிக்றகப்ப, சேலயொண்ணு போனசாத்த்ருவா. ஒரு கலியாணப் காச் சின்னா, அளத்துல சோலியெடுக்குற புள்ளக்கி இருநூத்தம் பது ரூபா குடுக்கா...”

பொன்னாச்சிக்குக் கேட்க கேட்க உள்ளம் துள்ளுகிறது. இருளாகக் கவிந்திருக்கும் எதிர்கால வாழ்வில் ஒளியிழை களை அல்லவோ ஆச்சி காட்டுகிறாள்?

“ஆச்சி. ஒங்கக்கு ரொம்பப் புண்ணியமுண்டு. அந்த அளத்துல எனக்கும் தம்பிக்கும் வேல வாங்கித்தாரும் நாங்க எங்க மாமன் அளத்துல வாருபலவை போட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/46&oldid=657543" இலிருந்து மீள்விக்கப்பட்டது