பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கரிப்பு மணிகள்

‘வந்தே. நாளக்கிக் கிருத்திகைப் பூசை. அதோடு பால் குளத்தாச்சி இறந்துபோன நாளு. அம்மங் கோயிலிலும் பூசயுண்டு, காரு அனுப்பிக்சிக் குடுக்கவா?”

‘நா ஒரு கோயிலுக்கும் அளத்துல ஒரு கூலி போட்டுக் கொடுக்கணும்...”

அதுக்கென்ன? நாச்சப்பங்கிட்டச் சொல்லிவிட்டுப் போற காலம அளத்துக்குப் போனா எடுத்துக்கறா. பொறவு எப்ப வார, 2”

‘எனக்குச் சாமியே இல்ல. என் சாமி செத்துப் போச்சு. எனக்குக் கோயிலுமில்லே...’

“அது சரி, சாமி. செத்துப் போச்சுண்ணா மறுபேச்சு என்ன இருக்கு...?”

பொன்னாச்சி சன்னலில் தெரியாத வண்ணம் பின்னே முற்றத்தில்தான் நிற்கிறாள். அவர் எழுந்து போகிறார். வாயிலில் ரிக்ஷா அதுகாறும் நின்றிருப்பதை அறிவித்துக் கொண்டு அது திரும்பிப் போகிறது.

“ஏட்டி, பாஞ்சாலி? ஒங்கக்காளக் கூப்பிடுடீ?” அவள் அழைக்கவேண்டிய அவசியமே இருக்கவில்லை. பொன்னாச்சியே'உள்ளே செல்கிறாள். * ‘ஒனக்கு அதிட்டந்தா. இவ பழைய கணக்கவுள்ள, கும்பிடப்போன தெய்வம் குறுக்க வந்தாப்பில வந்தா. நாளக்கு சின்னாச்சிய பொழுதோடு கூட்டிட்டுப் போயி. ‘அட்வான்ச வாங்கிக்கிங்க...இருவத்தஞ்சும் இருவத்தஞ்கம்

அம்பது ரூவா குடுப்பா...’

பொன்னாச்சிக்கு அந்த அம்மைக்கு எப்படி நன்றி கூறுவ தென்று புரியவில்லை. அந்தக் கணக்கப்பிள்ளை இவளுக்கு உறவு போலும்!

மலர்க் குவியல் பூரித்தாற் போல் முகம் உவகையால் பொங்குகிறது.

வாயில் திண்ணையில் சாய்ந்திருக்கும் தந்தையைத் தொட்டு, “அப்பாச்சி, அந்த ஆச்சி எனக்கும் தம்பிக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/51&oldid=657555" இலிருந்து மீள்விக்கப்பட்டது