பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 57

வள நா புடிச்சா வச்சுக்க முடியும்? அவ சின்னாச்சியாமே. அந்த சக்களத்தி வந்தா. வந்து கொமஞ்சா, மாமா ஊரில் இல்ல, பொறவு என்ன வந்து ஏசுவாண்ணு சொன்னா அவ கேக்கா இல்ல, நீரு என்னப் போட்டுக் காச்சுவீம்’ என்று முன்றானையை முகத்தில் தேய்த்துக் கொண்டு மூக்கை சிந்து கிறாள். அவ...சின்னச்சியிட்ட என் சொன்னா தெரியுமா, சோறுண்டு ரெண்டு நாளாச் கண்ணா. நா அப்படிப் பாவியா? ரெண்டுநாளா முக்காத்துட்டு கெடயாது. இவபோவேண்ணு குதிய்க்கா கோயில்காரரு வீட்டேந்து மூணு குவா அவளே வாங்கிட்டு வந்து போயிட்டா. தம்பியயும் கூட்டிட்டு. நா பட்டினி கெடக்கே. எம்புள்ளய பட்டினி கெடக்கு: வராத விருந்துக்கு இருந்த அரிசிய வடிச்சிப் போட்ட கடயில கடன் சொல்லி அவதா காப்பித்துள்ளும் கருப்பட்டியும் வாங்கியாந்தா!’

அவருக்கு இதில் ஏதோ குது இருக்கிறதென்று புலனா கிறது.

இத்தனை நாளா இல்லாத சின்னாத்தா ஒறவு எப்படி முளைச்சிருக்குன்னு ஒனக்கு அறிவு வேண்டாம்? அளத்தில பாத்தி மெதிக்க ஆள் கேட்டிருப்பா. அந்தக் காலத்துல தேயிலைத் தோட்டத்திலே மலங்காட்டில சாவுறதுக்கு எப்படி ஆள் பிடிப்பாளாம் தெரியுமா? தேனும் பாலும் வழியிம்...காக்காய ஒட்டத்தா ஆளும்பானாம்’ என்று. அவர் இரைகிறார்.
றானென்ன கண்டே நீரு எங்கிட்டச் சலம்பூாதீம்!” என்று கூறிய அவள் கூந்தலை அள்ளிச் செருகிக் கொண்டு களகில் கொழித்த அரிசிக் குருணையுடன் அடுப்படிக்குச் செல்கிறாள். n o m

தாத்துக்குடிக்குச் செல்ல வேண்டுமானால் கையில் பண மில்லை. அன்று காலையில் தொழி திறந்து பாத் இக்கு நீரி பாய்ச்சியிருந்தார். உப்பு குருணைச் சோறாக

4— 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/60&oldid=657575" இலிருந்து மீள்விக்கப்பட்டது