பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

கிழக்கே கடலின் அடிவரையிலிருந்து பொங்கிவரும் விண்மணி கண்களைக் குத்தும் கதிர்களைப் பரப்புகிறான். வாயிலில் பெரிய வளைவில் பனஞ்சோலை ஸால்ட் வொர்க்ஸ் என்ற எழுத்துக்கள் தெரியும் கதவுகள் அகன்று திறந்திருக்கின்றன.

தலைக்கொட்டை எனப்படும் பனஒலையால் பின்னிய கம்மாட்டுச் சாதனமும், அலுமினியத்தாக்கு மதிய உணவும் கைகொண்டு ரப்பர் செருப்பும் ஒலைச் செருப்புமாக உப்பளத்துத் தொழிலாளர் அந்த வாயிலுள் நுழைந்து செல்கின்றனர். சிறுவர் சிறுமியர் கந்தலும் கண்பீளையுமாக மேய்ச்சலுக்கு ஒட்டிப் போகும் மாட்டுக் கும்பலை ஒத்து உள்ளே விரைகின்றனர். முடியில் விளக்கெண்ணெய் பளபளக்க, அன்றைப் பொழுதுக்குப் புதுமையுடன் காணப் படும் இளைஞரும் அந்தக் கும் பலில் இருக்கின்றனர். முக்காலும் பாத்திகளில் செய்நேர்த்தி’ முடிந்து தெப் பத்தில் கட்டிய நீரைப் பாத்திகளுக்குப் பாயத் திறந்து விட்டு விட்டார்கள். உப்பை வாரிக் குவிக்கத் துவங்கிவிட்டனர். பொன்னாச்சியும் தம்பியும் வேலைக்குச் சேர்ந்து மூன்று சம்பளங்கள் வாங்கி விட்டனர். இத்தனை நாட்களில் பாத்திப் பண்பாட்டிலேயே மிதித்து அவளுடைய மென்மை யான பாதங்கள் கன்றிக் கறுத்துக் கீறல்கள் விழுந்து விட்டன.

உப்பளத்து வேலையில் சமுசாரி வேலை என்று சொல்லப் பெறும் பசிய வயல் வரப்புகளில் வேலை செய்வது போல் குளிர்ச்சியைக்காண இயலாது. இங்கு உயிரற்ற வறட் சியில், பண்புள்ளவர் செவிகளும் நாவும் கூசும் சொற்களைக் கண்ட்ராக்ட் நாச்சியப்பன் உதிர்த்த்போது முதலில் அவள் மருண்டு தான் போனாள். அவர்கள் ‘பண்பற்ற வசைச் சொற்களைத் தவிர்த்து மரியாதையாகப் பேசியே அறியார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/64&oldid=657583" இலிருந்து மீள்விக்கப்பட்டது