பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் ‘65

கிடைக்கிறது. அட்வான்சு பெற்றதுமே சின்னம்மா அவ னுக்கும் அவளுக்கும் காலில் போட்டுக் கொள்ள ரப்பர் செருப்பு வாங்கித் தந்தாள். அவள் அளத்தில் பெட்டி அமக்கையில் எல்லோரையும் போல் ரப்பர் செருப்பைக் கழற்றி விட்டு, பன்ஒலையில் பின்னி இரண்டு கயிறுகள் கோத்த மிதியடியை அணிகிறாள். அதுவே ஒருநாளைக்கு ஒரு சோடி போதவில்லை. சனிக்கிழமை மாலையில் கூலி கொடுக் கிறார்கள். தலைப்புரட்ட எண்ணெய், அரசி, புளி, மிளகாய் எல்லாம் தட்டில்லாமல் வாங்க முடிகிறது. சென்ற வாரம் சின்னம்மா அவளுக்குப் புதிய ரவிக்கை ஒன்றும், தம்பிக்குத் துண்டு ஒன்றும் எடுத்து வந்தாள். பருப்பு நிறையப் போட்டு வெங்காயம் உரித்துப் போட்டுக் குழம்பு வைத்துத் திருப்தி யாக உண்டார்கள். அடுத்த சனிக்கிழமைக்குக் கறி எடுத்துக் குழம்பு வைக்க வேண்டும் என்று ஆசையை அப்பன் வெளி பிட்டார். பசி.டசி அவிய இந்த உப்புக்கசத்தில் எசிய வேண்டும். -

நாச்சப்பன் பேரேட்டைப் பார்த்துத் தன் கீழுள்ளவர் பேர்களைப் படிக்கிறான். மாரியம்மாலே மூன்று பேர் ஒவ்வொருவருக்கும் ஒரு அசிங்கமான வசையைச் சொல்லிக் கூப்பிடுகிறான். அல்லி...அவள் பிள்ளையையும் தூக்கி வருகிறாள். கொட்டடியில் விட்டுவிட்டு உப்புச் சுமக்க வேண்டும். அன்னக்கிளி...அன்னக்கிளி சூலி.

பொன்னாச்சியைக் கீழ்க்கண்ணால் பார்க்கிறான் நாச்சி யப்பன். அவன் பார்வையில் அவள் துடித்துப் போகிறாள். அங்கு வேலை செய்யும் பெண்களில் யாரும் பொன்னாச்சி யைப்போல் சூதறியாத பருவத்தினரில்லை. இந்த ஒருமாச காலத்தில் அவன் அவளைப் பார்க்கும் பார்வை மட்டுமே ஆகாததாக இல்ைை. போகும்போதும் வரும்போதும் கழுத்தில் கொடுவதும், கையைத் தீண்ட முயல்வதும், இன்னும் அருவருப்பான சைகைகள் செய்வதுமாக இருக் கிறான். பேரியாச்சி என்ற கிழவி ஒருத்தி, கொத்து பல*ை போடுவாள். “புதுசா தளதளப்பா இருக்கா, ஏட்டி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/66&oldid=657588" இலிருந்து மீள்விக்கப்பட்டது