பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 கரிப்பு மணிகள்

ஒம்பாடு சோக்குத்தா. சோலிக்கீலியெல்லா சொம்மா, போக்குக் கர்ட்டத்தா...” என்று கேலி செய்தாள். பொன்னாச்சிக்கு நாராசமாக இருந்தது. “ஆச்சி, நீங்க பெரியவிய பேசற பேச்சா இது."என்றாள் கோபம்ாக.

பேரேட்டில் பெயர் படிக்கும்போதே அவன் பொன் னாச்சியை அன்று கூட்டத்திலிருந்து பிரிக்கச் சூழ்ச்சி செய்து விடுகிறான். -

‘ஏவுள்ள! நீ அவளுவக.ட உப்பள்ளப் போகண்டா. இப்பிடி வா சொல்லுற...”

பொன்னாச்சி தன் விழிகள் நிலைக்க, நகராமல் நிற் கிறாள். மற்றவர்கள் எண்பத்தேழாம் நம்பர் பாத்தியில் குவிந்த உப்பை வாரிக் கொட்ட நடக்கின்றனர். மாசாணம் கொட்டடியில் ஒருபுறமுள்ள கிடங்கறையில் சென்று பெட்டிகள், மண்வெட்டி முதலியவற்றை எடுத்து வரு கிறான்.

“அங்கிட்டு வாடி, விருந்துக் கொட்டிடியப் பெருக்கித் துப்புரவு பண்ணு. சாமானமிருக்கி, தேச்சுக்கழுவ...’ என்று அவளைக் கையைப் பற்றி இழுக்கிறான்.

அவள் கையை வெடுக்கென்று உதறிக்கொள்கிறாள். மற்றவர் யாரும் காணாததுபோல் செல்கின்றனர்.

விருந்துக் கொட்டடி என்ற கட்டிடம் மிகத் தொலைவில் இருக்கிறது. அதன் வாயிலில் கார்வந்து நிற்கக் கண்டிருக் கிறாள். அங்கு முதல்ாளிமார் வருவார்கள். அதன் ஓர் புறம் அலுவலகமும் இருக்கிறது. அங்கிருந்துதான் கணக்கப்பிள்ளை சம்பளத்தைப் பெற்றுவந்து கண்ட்ராக்டிடமோ, கங்காணி யிடமோ கொடுப்பார்.

பொன்னாச்சி விரிந்து கிடக்கும் அந்தப்பாத்திக் காட்டில் அவளை அவன் அழைத்துச் செல்வதை யாரேனும் நிமிர்ந்து யார்க்கிறார்களா என்று கவனித்துக் கொண்டே அச்சம் நடுங்கச் செல்கிறாள். ஆட்கள் ஒவ்வொருவராக இப்போது தான் வருகிறார்கள். விருந்து கொட்டடி என்பது கொட்டடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/67&oldid=657590" இலிருந்து மீள்விக்கப்பட்டது