பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 கரிப்பு மணிகள்

சேற்றில் கால் புதைந்துவிட்டது. துளக்கமுடியவில்லை, கைகளை அடித்துக்கொண்டு அவள் தத்தளிக்கையில் பனையேறி வீராசாமி குதித்து அவளை இழுத்துக் கரை சேர்த்தான். ‘ஏவுள்ள, நீச்சம் தெரியாம கசத்துல எறங்கே?’ என்று கடிந்தான்.

இப்போது அது நினைவுக்கு வருகிறது.

பகல் நேர உணவுக்கான ஒய்வு நேரம் முக்கால் மணி. தம்பி பச்சைக்கும் அப்போது ஒய்வு நேரம்தான். இருவருக்கும் தனித்தனித் தூக்குகள் வாங்கவில்லை. தம்பி, கண் இமைகளில், காதோரங்களில் பொடி உப்பு தெரிய, ஒடி. வருகிறான். உப்பின் நெடியில் கண்கள் கரிக்க, கன்னங்களில் :நீர் ஒழுகிக் காய்த்து கோடாகி இருக்கிறது. “மொவத்த நல்ல தண்ணில கழுவிட்டு வாரதில்ல...மே லெல்லாம் உப்பு. இத்தத் தட்டிக்க வாணாம்?” என்று அவன் மீது கையால்

தட்டுகிறாள்.

படிக்க வேண்டும் என்று பள்ளிக்குச் சேர்த்தால் ஒடி ஒடி வந்து விடுவான். காலையில் மாமி சக்திவேலுவுக்கு மட்டும் வெளியிலிருந்தேனும் இட்டிலியோ ஆப்பமோ வாங்கித் ஒன்னக் காக கொடுப்பாள். அவளுடைய தாய் இருந்த வரையிலும் அதே வீட்டில் தனியடுப்பு வைத்து இட்டிலிக் கடை போட்டாள். அப்படி வயிற்றுக்கு உண்ட பழக்கத்தில், காலையில் வெறுந் தண்ணிரைக் குடித்துவிட்டுப் பள்ளிக் கடம் போகாமல் ஒடி ஒடி வந்து அக்காளிடம் “பசிக்குதக்கா’’ என்பான். பிறகு அவன் படிக்காமல் பரவப்பிள்ளைகளுடன் கடலுக்குப் போவது, அல்லது வேறு வேலை செய்வதென்று தாவி, படிப்பதை விட்டு விட்டான். o

தூக்குப் பாத்திரத்தைத் திறந்து நீர்ச் சோற்றையும் துவையலையும் அவனுக்குக் கையில் வைத்துக் கொடுக் .கிறாள்.

‘அக்கா, அங்ஙன ஒரு டைவர் இருக்கா, கடலுக்குள் ளேந்து மிசின் தண்ணியக் குழாயில கொண்டிட்டு வாரதில்ல? அந்த டைவர் தா கடலுக்கடில இருந்து பைப்பெலா முடுக்கித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/73&oldid=657604" இலிருந்து மீள்விக்கப்பட்டது