பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 7 I

தரா. பெரி.பைப். நாம் போயிப் பார்த்தே. கடலுக்கடில ஆளத்தில போயி மீன்குட்டி மாதிரி நீச்சலடிச்சிட்டே பைப் மாட்டுறா...”

பொன்னாச்சிக்கு அவன் பேசுவது எதுவும் செவிகளில் உறைக்கவில்லை.

“ஆனாக்கா...அந்தாளு, எப்பமும் கள்ளுகுடிச்சிருக்கா, இல்லாட்ட தண்ணிக்குள்ள கெடக்க முடியுமா? போலீ சொண்ணும் அவியளப் புடிக்காதாம். அளத்து மொதலானியே பரிமிசன் குடுத்து அதுக்குன்னு ரெண்டு ரூபாயும் குடுப்பா r thl"”

பொன்னாச்சிக்கு அது ரசிக்கவில்லை.

“நீ ஒருத்தரிட்டவும் போகண்டா, பேசன்டா, ஒஞ்சோலி புண்டு, நீயுண்டுன்னு வா..” என்று அறிவுரை கூறுகிறாள்.

வயசாகியும் கபடம் தெரியாமல், வளர்ந்தும் வளர்ச்சி பெறாத பிள்ளை. இவனுக்கு அவளைத் தவிர வேறு யாரும் ஆதரவில்லை. -

“ஆனால்...அந்தக் கண்டிராக்டிடமிருந்து அவள் எப்படித் தப்புவாள்?

இந்தத் தம்பிக்கு அவளுக்கேற்பட்டிருக்கும் சோதனை யூகிக்கத் திறனுண்டோ?...

‘ஏக்கா, நீ சோறுண்ணாம எனக்கே எல்லா வச்சித் தார...’

“@dev prrrrrr...” என்பவளுக்குக் குரல் தழுதழுக்கிறது. ‘இந்த உப்புக் காட்டில் இப்பிடிச் சீரளியிறமேன்னு நினைச்சே.” என்று கண்களைத் துடைத்துக் கொள்கையில் அங்கே புளித்த வாடை சுவாசத்தை வளைத்துக் கொள்கிறது. யாருடைய சோறு இப்படிப் புளித்திருக்கிறது?’ என்று கேட்பது போல் திரும்பிப் பார்க்கிறாள்.

கொட்டடியில் கூட்டம் நிறைந்திருக்கிறது. யார் யாயோ ஆனும் பெண்ணுமாகத் தொழிலாளிகள் “ஐட்ராவை:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/74&oldid=657606" இலிருந்து மீள்விக்கப்பட்டது