பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 77

கருவாடா? வறக்கலியா?” என்று நா ருசிக்க உண்ணும் ஆவலில் அப்பன் கேட்கிறார். சின்னம்மா பம் டென்று பதில் கொடுக்கிறாள்.

தலைப்புரட்ட, காலுக்குக் குழச்சிப்போட எண்ணெ யில்ல. எண்ண என்ன வெல தெரியுமா?”

அப்பச்சி பேசவில்லை தட்டில் கைகழுவிவிட்டு, நகர்ந்து கொள்கிறார். தம்பி வாசல் திண்ணைக்குப் போய்ச் சுருண்டு கொள்கிறான். சரசுவும் நல்லகண்ணுவும் வாசலுக்கு ஒடி ஆச்சி வீட்டில் ரேடியோப் பெட்டி பாடுவதைக் கேட்கப்

போகின்றனர்.

சின்னாச்சியும் அவளும் சோறு வைத்துக்கொண்டு அமரு கின்றனர். கருவாடு நன்றாக இல்லை. வீச்சம் குடலைப் புரட்டுகிறது. முகம் முகத்துக்குத் தெரியவில்லை. உயிரி பிழைக்க மட்டுமே அன்ன ஆகாரம் கொடுக்கும் கூலியைப் போன்று ஒர் சிம்னி விளக்கு. அந்த மஞ்சள் ஒளியில் விவரம் காண முடியாது. ஒரு குழம்பு வைத்துச் சுவை காணக்கூட முடிவதில்லை. மாமன் வீட்டிலும் வறுமைதான் என்றாலும், நிதமும் இந்த வேகாச்சோறு இல்லை. இந்த நூல் பிடித்த வரைகள் அங்கு இல்லை. இந்த ஒளியில் முகம் களித்தாலும் கண்டு கொள்ள முடியாது அது அவசியமும் இல்லை அவர்கள் உழைப்பின் பயனான உணவைக் கொண்டு பசி எரிச்சலைப் புதைக்கின்றனர்.

பொன்னாச்சிக்கும் தம்பிக்கும் அந்தச் சனிக்கிழமை யில் கூலி போடவில்லை. ஞாயிறன்று காலையில் தம்பியைக் கூட்டிச் சென்று அளத்தில் ஆபீசில போய் வாங்கிக் கொள்ள வேண்டும். “நேரமாகிவிட்டது. நாளைக்கு வா!’ என்று கண்ராக்ட் கூறினான். எல்லோரும் வருவார்கள் என்றாலும் அவளுக்கு நெஞ்சம் அச்சத்தினால் கட்டிக் கிடக்கிறது. அதை நினைத்தால் சோறும் இறங்கவில்லை. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/80&oldid=657619" இலிருந்து மீள்விக்கப்பட்டது