பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

02 கரிப்பு மணிகள்

பணத்தையும், வாடகையையும் கொடுத்து விடவேண்டும் என்று கூறுகிறாள்.

“இப்ப வேணா...அடுத்த கூலிக்குக் குடுக்கலாம். அடுப்புக்கு வய்க்கப் பானை ஒண்ணு வாங்கணும். அவிப ஒண்ணுஞ் சொல்லமாட்டா.”

“எங்கிட்டக் கேட்டா; ஏங்குடுக்கலன்னு...’

‘பானை வாங்கணுமின்னா ஒண்ணுஞ் சொல்லமாட்டா. மேலுக்கு அப்படி வெட்டித் தெறிச்சாப்பல பேசினாலும் கெரு ஒண்ணுங் கெடயாது பாவம் ஒரே பய...அவன்

போயிட்டா...அதுலேந்து ஆச்சி முன்னப் போலவே. இல்ல...’ s

“ஆச்சி புருசன் எங்கேயிருக்கா?”

“புருசனொன்னுமில்ல. அந்தக் காலத்துல அளத்துல சோலி எடுக்கறப்ப அந்தக் கணக்கவுள்ள வாரானே. அவங்: கொலச்சி பெரி முதலாளி, இப்ப கெழமா படுத்த படுக்கையா யிருக்கான்னு சொல்லிக்கிடுவா. அவனுக்குக் கூட்டி. வச்சிட்டா. அவெ அந்த காலத்துல பொம்பிளன்னா பேயா அலையுறவ. ஆனா, இந்தாச்சி ஒரு கெளரவப் பட்டாப்பலவே. வீட்டோடு இருந்திட்டா. பொட்டி கிட்டி மொடயும். இந்த வளவெல்லாம் அந்தக் காலத்துல அந்தக் கணக்கவுள்ள வகையா வந்ததுதா. ஒரு பையன் இருந்தா, நல்ல வாளிப்பா...அதா போட்டோ வச்சிருக்கே. வாசல்ல, அதுதா. படிச்சிட்டிருந்தா காலேசில, பொக்குனு போயிட்டா...”

‘எனக்குச் சாமியில்ல. எஞ்சாமி செத்துப் போயிட். டான்னு அவள் கூறிய சொற்கள் பொன்னாச்சிக்கு நினைவில் மின்னுகின்றன. -

‘வயசுப்புள்ள எப்படிப் போயிட்டா? காருல கீருல அடிபட்டுப் போயிட்டானா?”

என்னென்னவோ சொல்லிக்கிறாவ. நமக்கு என் னம்மா தெரியும்? அந்தப் பய, ஆனா, மொதலாளி செறுப் பத் துல் எப்படி இருதாவளோ அப்பிடியே இருப்பா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/85&oldid=657628" இலிருந்து மீள்விக்கப்பட்டது