பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 83

கெளவனுக்கு நாலு பொஞ்சாதி கெட்டி, மொத்தம் பன்னண்டு ஆம்பிளப் பிள்ள இருக்கா. கடோசிக்காரந்தா வேதக்காரப் பொம்பளயக் கெட்டி, கிறிஸ்தியானியாயிட்டா அவியளுக்கு அளத்துல செவந்தியா வரம்பக்கம் பிரிச் சிட்டாவ. அவதா துரை அளம்பா. முன்ன ஒண்ணாயிருந்த அந்தக்காலத்துல நாங்கூட செய்நத்துக்கு ஒண்ணே கால்ருவா கூலிக்குப் போயிருக்கே. அந்தப் புள்ளயல்லாங்கூட இப்படி அச்சா மொதலாளியப்போல இருக்கமாட்டாவளாம். சொல்லிக்குவா. எனக்கென்ன தெரியும்? நடந்த தென்னன்னு கிளக்கால உதிச்சி மேக்கால போறவனுக்குத்தா தெரியும். இந்தப்பய பங்களாவுக்குப் போனானா ஒருநா. போட் டோவப் பார்த்தானாம். ஆத்தாகிட்டவந்து, நானும் அவிய மகந்தானே, எனக்கொரு பங்கு சொத்து வாரனுமில்ல? பத்து லட்சம் பங்கில்லேன்னாலும் ஒரு லட்சம் வரணு மில்லன்னானாம். வக்கீலக் கண்டு பேசுவன்னானாம், பொறவு என்ன நடந்ததுன்னு தெரியாது...வக்கில் புரத்துல அம்மன் கொடை வரும். அன்னிக்குத்தா தேரியில இந்தப்பய அந்தால வுழுந்து கெடந்தா. நீல டெளசரு. சரட்டு எல்லாம் அந்தால இருக்கு...ஆச்சி கூத்துப் பாக்க ஒக்காந்திருக்கா. சேதி சொன்னாவ. போலி செல்லாம் வந்தது. என்னமோ தண்ணியக் குடிச்சிட்டா. அதுதாண்ணு சொல்லி மறச் சிட்டாவ...’

பொன்னாச்சி திடுக்கிட்டுத் திகைத்து சொல்லெழும் பாமல் அமர்ந்திருக்கிறாள். அடுப்பு திகுதிகுவென்று எரி கிறது; பானைச்சோறு பொங்குகிறது. சின்னம்மா ஒரு கள்ளியை இழுத்து நீரைத் தெளித்துச் சிறிது அணைக் கிறாள்.

“ அப்படியா...? அப்படிக்கூடச் செய்வாங்களா பின்னம்மா? அப்ப அந்த அளத்து மொதலாளிக்குப் பண்ண்ைடு லச்சமா இருக்கு...’

‘நமக்கு என்னாத்தா தெரியிது. நாம லச்சத்தைக் கண்ட மா, மிச்சத்தைக் கண்டமா சொல்லிக்குவாக:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/86&oldid=657629" இலிருந்து மீள்விக்கப்பட்டது