பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 கரிப்பு மணிகள்

உப்புத் தொழில்ல ஒரம் போடணுமா. களை எடுக்கனுமா, பூச்சி புடிச்சிடுமேன்னு பயமா? மிஞ்சி மிஞ்சி, மழை பெஞ் சாக் கொஞ்சம் கரையும். மறுவருசம் காஞ்சா உப்பாகும். இந்தத் துரத்துக்குடி ஊரிலேயே பேயறதில்லை. காயிறது பார் பேஞ்சிச்சின்னா அளத்துக்கு வேலய்க்கு வர ஆளுவ ரொம்ப இருக்கமாட்டா. காஞ்சிச்சின்னா கோயில்பட்டி அங்க இங்கேந்தல்லாம் கூலிக்கு இங்க ஆளுவந்து விழும். அதனால் மொதலாளி மாருக்கு நட்டம் எங்கேந்து வரும்? “சிப்சம், *மாங்கு எல்லாம் மூடமூடயா வெல. சிமிட்டி ஃபாக்டரிக்கு அப்படியே போவுது. நாம சொமை சொமக்கிறோம். வேறென்ன தெரியுது?...

பொன்னாச்சி சிலையாக இருக்கிறாள்.

7

அன்று நாச்சப்பன் பொன்னர்ச்சியையும் அன்னக் கிளியையும் கசடு கலந்து கிடக்கும் உப்பை, ஒரு கோடியிலி ருந்து மறுகோடிக்குக் கொண்டு போடப்பணிக்கிறான். அவை யாரேனும் கருவாடு போடவோ, தோல் பதனிடவோ வாங்கிப் போவார்களாக இருக்கும்.

அன்னக்கிளியைப் பார்க்கையில் பொன்னாச்சிக்கு அச்ச IT SE இருக்கிறது. அவளுடைய கன்னத்து எலும்புகள் முட்ட, கண் விழிகள் சதையில் ஒட்டாமல் தெரிய, வயிறு குவிந்து இருக்க உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அவள் குனிந்து

“மாங்கு எனப்படும் அந்தக் கசடை வாளியில் வாரிப் பெட்டியில் போடுகிறாள்.

குனிந்து நிமிர்ந்து அதை அவளால் செய்ய இயல வில்லை.

“சிப்சம்.ஜிப்சம் எனப்பெறும் கூட்டுப் பொருள் சிமிட்டி உற்பத்திக்கு இன்றியமையாதது.

  • மாங்கு-மண்ணும் கசடும் கலந்த உப்பு.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/87&oldid=657631" இலிருந்து மீள்விக்கப்பட்டது