பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கரிப்பு மணிகன்

‘யாரோ அறைந்து அறைந்து கூறுவதுபோல் பொன் னாச்சியின் நெஞ்சில் அந்த ஒலி மோதி எதிரொலிக்கிறது.

பொட்டவுள்ளயா?...” என்று, ஏதோ உச்சக் கட்டத்தை எதிர்ப்பார்த்திருந்தாற் போல் நின்றவர் சப். பிட்டவராகச் சாப்பாட்டுத் துக்குடன் செல்கின்றனர். a”

ராமசாமி தான் சைக்கிளை எடுத்துக் கொண்டு. எங்கோ வெளியே சென்று, தேநீரோ காப்பியோ வாங்கி வருகிறான். பிறகு உப்பு எடுத்துச் செல்ல வந்த லாரி’ யிலோ, எதிலோ பிள்ளை பெற்றவளைத் தூக்கிவிட்டு, ஆகபத்திரிக்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்கிறான். கங்காணி செல்வராசுவுக்கு ஒரே ஆத்திரம். -

செல்வராகவும் படிக்கத் தெரிந்தவன். டிகிரி பார்க்கும். வேலைக்காரனுக்கு மாசம் சம்பளம். டிகிரி பார்த்து தொழி திறந்து மூடி வேலை செய்வது, உப்பு வாருவதை, விடக் கொஞ்சம் கெளரவ வேலை என்று நினைப்பு. சட்டை போட்டுக்கொண்டு “ஐட்ரா மீட்டரும் அளவைக் குழாயுமாகத்தான் வளைய வரவேண்டும் என்று அந்தப் பணிக்காகக் கணக்கப்பிள்ளை தங்கராகவை எப்படி நைச்சியம் செய்யப் பார்த்தான் ஒவ்வொரு வாரமும் சம்பளத்தில் பத்து ரூபாய் பிடித்துக்கொள்ளச் சம்மதித் தான். பஸ்தர் மிட்டாயும், ஆரஞ்சியும் வாங்கிக் கொண்டு. சென்று வீட்டில் வைத்தான். கடைசியில் “ஐட்ரர் வேலை. அந்தப்பயலுக்கு ஆகிவிட்டது. அந்தப் பயல், அறைவைக் கொட்டடியில் உப்புப் பொடி சுமக்க வேலைக்கு வந்து சேர்ந்தவன்தான். அரசியல் கட்சிக்காரர்களுடன் சேர்ந்து ஆட்டம் போடுகிறான்.

கணக்கவுள்ள, என்ன இப்படி ஏமாத்திட்டீரே...’ என்றான் மனத்தாங்கலுடன்.

“அந்தாளு பெரிய இடத்து சிவாரிசு. நா பொறவு என் சேய?’ என்றான் கணக்கப்பிள்னை.”

இதற்குப் பிறகு அட்டி கிடையாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/91&oldid=657640" இலிருந்து மீள்விக்கப்பட்டது