பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 91

காலந்தா ஒத்தருக்குப் பாரமா இருக்க பொறவு இத்த வீட்டுக்கார ஆச்சிதா பணஞ்சோல அளத்துல அட்வான்க, போனக எல்லாம் செடய்க்கும்னு வேலைக்கு சேத்து, விட்டா...” - s

“அட...பொன்ன்ாச்சியா இம்புட்டுப் பேச்சுப் பேகறா?” என்று அவிர் கேட்பது உண்மையில் பாராட்டா, அல்லது இடக்கா என்று. புரியவில்லை. .

‘இப்படியேதான் ஆள ஏமாத்தறாணுவ, ஏத்தா ஆடு நனயிதுண்ணு ஒநாய் அழுமா? அட்வான்சாம், அட்வான்ஸ்? படிக்கிற பருவத்துப் பிள்ளைய எல்லாம் ஆசைக்காட்டி, மடக்கிப் போட்டு உப்புச் செமக்க வைக்கிறானுவ. காது குத்து, கண்ணாலம். காச்சி, மொதலாளி பணம் கொடுப் பான்னு கங்காணிய குழையடிப்பானுவ, இந்தத் தொழிலாளி யாரானும் முன்னுக்கு வந்த கதை எங்கயானும் உண்டா? செந்திலாண்டவ அளத்து முதலாளி, நாங்க கூட்டுறவு உற்பத்தி விற்பனைத் தொழிலாளர் சங்கம்னு நூர்த்தம்பது ஏக்கருக்குப் பட்டா வாங்கையிலே அவனும் கட்டுக்குத்தவை நூறு ஏக்கர் வாங்கினா, அப்பமே தெரியல எங்களுக்கு. அவன் வாக்கா, ஒடைக்கு அப்பால வாங்கினா. இப்ப, அவன் ஆயிரம் ஏக்கருக்கு மேல சேத்துட்டான்; வார்முதல் தொழில் பண்றா. குத்தர்லத்துல பங்களா, கொடைக்கானல்ல பங்களா, செந்தியாண்டவனுக்கு சேவை பண்ணப் போனா அங்க ஒரு புங்களா...பொண்ணு பிள்ளயெல்லாம் அமெரிக்கா வுக்கும் ஜர்மனிக்கும் போறா, ஊரில இருக்கிவ தொழிலை யெல்லாம் வளச்சிப் போட்டுக்கிறான். இப்ப உப்புத் தொழிலாளி நீரு-நீருன்னுதா வெச்சக்குவமே. ஒரு பான சோத்துக்கு ஒரு சோறுதான் பதம்? கண்ணு வெள்ளப்பட வழிஞ்சி ஒண்ணில்லாம உக் காந்திருக்கீரு...’

, மாமாவுக்கு ஆவேசம் வந்துவிட்டதென்று பொன்னாச்சி நினைக்கிறாள். அவள் பேசத் தொடங்கினால் இப்படித் தான் பேசிக்கொண்டு போவார். ஆனால் வீட்டில் மட்டும்

அவர் பேச்சு எடுபடாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/94&oldid=657646" இலிருந்து மீள்விக்கப்பட்டது