பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 கரிப்பு மனிைகள்

“ரா இருந்துட்டுக் காலமே போவலாமே!” என்று: அப்பச்சி மரியாதையாகக் கூறுகிறார்.

‘இல்ல ஒரு ஆளப் பாக்கணம், ஒம்பது மணிக்குதான் வீட்டுக்கு வருவான்னா. நா வாரே...பொன்னாச்சி?... பதனமா இருந்துக்க எல்லா இருக்காவ, இருக்கிறம்ன்னாலும் அவவ தன்னத்தானே பேணிக்கணும். தயிரியமாயிருந்துக்க. பிறகு முருகன் இருக்கிறான்!” என்று அறிவுரை கூறிக் கொண்டு நடக்கிறார்.

பச்சை அதற்குள் படுத்துவிட்டான். அவனை எழுப்பி வருகிறாள் பொன்னாச்சி.

லே தம்பி. ஒளுங்கா பெரிய வங்க சொன்ன பேச்சைக் கேட்டு நடந்துக்க வேண்டாத சகவாசத்துக்குப் போகாத வாரன் மாப்பிள! வரேம்மா... !’

அவர் படியிறங்கிச் செல்லும் வரையிலும் பொன்னாச்சி உடன் வந்து திரும்புகிறாள். -

8

ராமசாமி வேலை முடிந்ததும் நேராகக் குடிசைக்குத் திரும்பமாட்டான். தலைத்துணியை அவிழ்த்துப் போட்டுக் கொண்டு படிப்பகத்துக்குச் செல்வான். கந்தசாமியின் தநீர்க்கடையில் தொழிலாளரைச் சந்தித்து நிலவரம் :பகவான். ஒரு சராசரி உப்பளத் தொழிலாளியில் இருந்து அவன் மாறுபட்டவன்.

அவன் துவக்கப்பள்ளிக் கல்வி முடித்து ஆறாவதில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அவன் தந்தையின் ஆதரவு குடும்பத்துக்கு இல்லாததாயிற்று. அவனுடை தந்தை சாத்தப்பனுக்கு அவனுடைய அம்மாளுக்கே படிப்பு சொல்லிக் கொடுக்க வேண்டுமென்ற ஆசை இருந்ததி: அளத்தில் வார்முதல் தொழிலாளியாக இருந்த அவர் தொழி லாளிகளைக் கூட்டிச் சங்கம் சேர்த்து, உரிமை கோரும் முயற்சிகளில் ஈடுபட்டு முன் னின்று உழைத்தவர். அந்நாளில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/97&oldid=657651" இலிருந்து மீள்விக்கப்பட்டது