பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/112

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

ஊரில் ஒரு தென்னைமரம் பாக்கி விடாமல் ஏறி இறங்குவேன்; ஒரு கிணறு பாக்கிவிடாமல் இறங்கி ஏறுவேன். எவ்வளவு உயரமான மதிலாயிருந்தாலும் எகிறிக் குதிப்பேன். ஏற்றக்கட்டையின் - மேலே ஏறி மடுவிலே குதித்து மண் எடுத்து வருவேன். கையை ஊன்றாமல் கரணம் போட்டுக் கொண்டே போவேன். கீழே நின்றபடியே தென்னை மரத்தைப் பிடித்து உலுக்கினேனேயானால், தேங்காய்கள் 'தொப்-தொப்' என்று கீழே விழும். நல்ல பாம்பு புற்றிலே கையை விட்டுப் பாம்பை வெளியே இழுத்துக் 'கர-கர' என்று சுற்றிக் கீழே அடிப்பேன். ஒரு குத்து விட்டேனேயானால், எப்பேர்ப்பட்ட கிங்காங் தாராசிங்கும் குட்டிக் கரணம் போட்டுக் குப்புறக் கீழே விழுவார்கள். மாடு பிடி சண்டை யாகிய சல்லிக் கட்டில், எப்பேர்ப்பட்ட முரட்டுக் காளை களையும் கொம்புகளைப் பிடித்து முறுக்கிக் கீழே அடித்து விடுவேன். இட்டலி சாப்பிடும்போது, மிளகாய்ப் பொடிக்கு மற்றவர்கள் போல் செக்கில் ஆடிய எண்ணெயை விட்டுக் கொள்ளமாட்டேன் - பச்சை எள்ளைக் கையால் பிழிந்து எண்ணெய் வழியச் செய்து விட்டுக் கொள்வேன். அந்தக் காலத்திலே அப்படியெல்லாம் செய்தவன் நான்!

இப்படியாகத் தங்கள் இளமைக் காலத்து வீரச் செயல்களைப் பற்றியே பெருமையாகப் பேசிக்கொண்டிருப்பார்கள் சிலர். பழம் பெருமை பேசித் திரிவாருள் இன்னும் பல வகையினர் உண்டு. இப்போது ஒன்றும் தாங்கள் ஆக்க வேலை புரியாமல், வெட்டியாக முன்னோரின் -முற்காலத்தின் பழம் பெருமையை மட்டும் பேசிக் கொண்டிருப்பது பைத்தியக்காரத்தனமாகும்.

ஆனால், பழம் பெருமையை அறவே'பேசக்கூடாது என்றும் சொல்வதற்கில்லை. வரலாறு படிப்பது எதற்காக? வரலாறு படித்ததின் பயனாகப் பழைய நிகழ்ச்சிகளை