பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

119

முதலில் இன்பியலை மிகுதியாய் விரும்பிப் படிப்பவர்கள் அதில் தெவிட்டல் ஏற்பட, பின்னர்த் துன்பியலில் சுவை காணத் தொடங்குவர். புணர்ச்சி என்பது காம வெறியாட்டத்தின் விளைவு. பிரிவின் போதுதான் காதல் உணர்வு கொழுந்து விட்டுத் தளிர்த்துக் காணப்படும். காதல் சுவையின் உயர்ந்த எவரெஸ்ட் கொடுமுடி எல்லையைக் காணவேண்டுமாயின், குறிஞ்சிப் பாடல்களினும் பாலைப் பாடல்களிலேயே மிகுதியாகக் காணமுடியும். எனவே, நெடுந்தொகையில் பாலைப் பாடல்கள் மிகுதியாய்த் தொகுக்கப்பட்டிருப்பதின் காரணம் புலனாகலாம்.

முறை வைப்பு:

தொல்காப்பியத்தில் (அகத்திணையியல்-5,9) முல்லை குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்னும் வரிசையில் ஐந்திணைகள் முறைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு மாறாக, பாலை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நெடுந்தொகையில் உள்ள முறைவைப்புப் பொருந்துமா? ‘முல்லை குறிஞ்சி மருதம் நெய்திலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே என்னும்(தொல்-அகம்-5) நூற்பாவின் உரையில், 'சொல்லவும் படும்’ என்னும் எதிர் மறை உம்மையால் இம்முறை மாற்றியும் சொல்லலாம் என்பது பெறப்படும் என்பதாக, இளம் பூரணரும் நச்சினார்க்கினியரும் எழுதியிருப்பது காண்க.

நெடுந் தொகையில் ஒவ்வொரு திணையும் பலரால் பாடப்பட்டிருத்தலானும், ஒத்த எண்ணிக்கையில் இன்றி, 200,80,40,40,40 என்னும் வேறுபட்ட எண்ணிக்கையில் இருத்தலானும், இந்நூல் ஐந்து திணைகளும்கலந்துதொகுக்கப்பட்டது. நெடுந்தொகை நானுாறில் பாதிப் பாடல்கள் பாலையாயிருப்பதால் ஒன்று விட்டு ஒன்றாக ஒற்றை எண்-