பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/137

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

135

5.மூன்றாம் கூறு:

இனி, முக்கூறுகளுள், பாரதியின் இலக்கியமே ஒரு வரலாற்று நூலாகும் என்னும் மூன்றாம் கூறினை எடுத் துக் கொள்வோம். -

5.1. வேர் மூலங்கள்

வரலாற்றாசிரியன் கண்ணை மூடிக் கொண்டு மனம் போன போக்கில் ஏதாவது எழுதினால், அது அத்தைபாட்டிக் கதையாகி விடும். எழுதுவதற்குச் சான்றாகத் தகுந்த வேர் மூலங்களை (Sources) வைத்துக் கொண்டே வரலாற்றாசிரியன் எழுதுகோல் பிடிக்க வேண்டும். வேர், மூலங்களைக் கொண்டு வரலாற்றை மூவகைப் படுத்தலாம் அவை :-

(1) பட்டப்பகலில் நடந்த வரலாறு. (2) வைகறையில் பணி மூட்டத்தில் நடந்த வரலாறு. (3)அமாவாசை நள்ளிரவில் நடந்த வரலாறு-என்பன. பட்டப் பகலில் நடந்த வரலாறு என உருவகிக்கப்படுவது, ஆண்டு-திங்கள் -நாள்-கிழமை-மணி (நேரம்)-இடம்-ஆட்கள்-நிகழ்ச்சிகள் முதலிய அனைத்தும் தந்து இந்தக் காலத்தில் எழுதப்படும் வரலாறாகும். வைகறையில், போபவர்-வருபவர் தெளி வாகத் தெரியாத பனி மூட்ட வரலாறு என்பது, இலக்கியங்களைக் கொண்டு ஒரு தோற்றமாக நுனித்துணர்ந்து அறிந்து கொள்ளும் வரலாறாகும். அமாவாசை நள்ளிரவு வரலாறு என்பது, புதைபொருள்-அகழ்வாராய்ச்சி-இடிபாடுகள் முதலிய தடயங்களைக் கொண்டு அறிந்து கொள்ளும் வரலாறாகும்.

இம் மூன்றனுள், இலக்கியங்களைக் கொண்டு அறிந்து கொள்வது இடைப்பட்டது. பாரதியாரின் இலக்கியத்தைக் கொண்டு அறிந்து கொள்ளும் வரலாறு இப்பிரிவைச் சேர்ந்-