பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/151

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

149


நூற்பொருள்:

நந்திக் கலம்பகத்தால், நந்தி வர்மனைப் பற்றியும் அவன் காலத்து நாட்டு வரலாற்றைப் பற்றியும் பல செய்திகள் தெரிந்து கொள்ளலாம்:

நந்தியின் குலம் சந்திரர் குலம்; மாலை தொண்டை மாலை; கொடையும் முத்திரையும் விடை, சமயம் சைவம்; யானையின் பெயர் ஐராவதம்; பறை கடுவாய்ப் பறை: தலைநகர் காஞ்சிபுரம்; துறைமுகங்கள் மயிலாப் பூரும் மாமல்லபுரமுமாம்.

நந்தி அறநெறி வழுவாத செங்கோல் மன்னன்-வரையாத வள்ளல். கல்வி கேள்விகளில் மிக்கவன்-செந்தமிழை ஆய்ந்து சுவைப்பவன்-என்னும் செய்திகட்கு நூலில் பலப் பல அகச்சான்றுகள் உள்ளன.

ஆட்சிப் பரப்பு:

நந்திவர்மன், கச்சி நாட்டோன், மல்லை வேந்தன், மயிலையாளி, தொண்டைவேந்தன், தென்னவர் கோன், சோணாடன், காவிரிநாடன், உறந்தையர் கோன், குமரிக் கொண்கன், கங்கை மணாளன், வடவேங்கட நாடுடை மன்னர் பிரான், வடநாடுடை மன்னர் பிரான், அவனி நாரணன், முந்நீருங் கொண்ட வேந்தர்கோன் முதலிய பெயர்களால் நந்திக் கலம்பகத்தில் சிறப்பிக்கப் பெற்றிருப் பதிலிருந்து அவனது ஆட்சிப்பரப்பின் விரிவும் வெற்றியும் புலனாகும்.

வெற்றிகள்:

நந்தி வர்மன் தன் ஆட்சிக் காலத்தில் பல இடங்களில் போர். புரிந்து பகைவர்களை வென்று முறியடித்த செய்தி நந்திக்கலம் பகத்தால் தெரிகிறது. குருக்கோட்டை,