பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/165

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

163

3. Epitome De Botanique.....De L Inde-Helianthus Annus Souriakandicedy-Tournesol, Cultive: (Pondich...)

- { மூன்றாவது நூலில், சூரியகாந்தி புதுச்சேரி வட்டாரத்தில் பயிரிடப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சூரியகாந்திச் செடி என்பதன் பெயராக இதில் குறிப் பிடப்பட்டுள்ள Tournesol என்னும் பிரெஞ்சு மரபுத் தொடரின் பொருள், சூரியனை நோக்கித் திரும்புவது’ என்பதாகும். Tourne=Turn=திரும்புதல்; Sol=சூரியன். பிரெஞ்சுத் துறவியர் இருவரின் பிரெஞ்சு-தமிழ் அகரா தியில் உள்ள இதன் பொருள் வருமாறு:

‘Tournesol=சூரியகாந்தி=ஞாயிறுதிரும்பி=பொழுது வணங்கி என்பதாகும்”

அடுத்து, லரூசு பிரெஞ்சுக்குப் பிரெஞ்சுப் பேரகராதியில் (Dictionnaire Larousse) உள்ள இதன் பொருள் விளக்கம் வருமாறு; Tournesol = “... Les Fleurs Se tournent vers le Soleil comme l’ heliotrope et l’ helianthe...” guyslv இதன் பொருளாவது:- “ஹெலி யோத் ரோப்’, ‘ஹெலி யாந்த்’ என்பன போலச் சூரியனை நோக்கித் திரும்பும்மலர்கள் என்பதாம்.

கைப் பூணுக்குக் கண்ணாடி எதற்கு? சூரிய காந்திப் பூக்கள் மட்டு மல்ல-சூரியகாந்தி இலைகளும் சூரியனை நோக்கித் திரும்புவதைப் புதுச்சேரி வட்டாரத்தில் காண லாம். தம்மூர்ப் பக்கத்தில் சூரிய காந்தியைப் பொழுது வணங்கி"என்னும் பெயரால் பொது மக்கள் வழங்குவதுண்டு என்பதாக வேலூர் நண்பர் ஒருவர் சொல்லியிருக்கிறார். எனவே, சூரிய காந்தி ஞாயிறு நோக்கித் திரும்புவதுண்டுபொழுது வணங்குவதுண்டு-என்று துணிந்து சொல்லலாம்