பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/171

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

169

துறையில் பெருச்சாளி புரியும் பணியும் பெரியதே. இவ்வாறு மக்களின் பேச்சு வழக்கில் எடுத்ததற் கெல்லாம் ஒப்புமைச் சுவையைக் காணலாம். எந்த ஒப்புமையும் திடீ ரென உள்ளத்தில் தோன்ற வில்லையெனில், ‘என்னமோ சொல்லுவாங்களே அது போல’ என இனந் தெரியாத ஒப்புமையாவது மக்கள்கூறுவது இயல்பு. எனவே, ஒப்புமைக் கலை மக்கள் கலை என்பது போதரும்

தாய்மைக் கலை:

(5) ஒப்புமை ஒரு கலையாகத் - திகழ்வதன் றிப் பல் வேறு கலைகளின் தாயாகவும் விளங்குகிறது. ஒப்புமைக் கலையிலிருந்து பல கலைகள் பிறந்தன என்று கூறுவதனி னும், ஒப்புமைக் கலையே பல கலைகளாக மாறி உருவெ டுத்துள்ளது என்றுகூடக் கூறிவிடலாம் இசை, நடனம், நாடகம், ஒவியம், சிற்பம் முதலிய கலைகள் ஒப்புமைக் கலையின் அடிப்படையில் உருவானவையே. குறவஞ்சி குறி சொல்லுவதுபோல் இசையரங்கில் பாடுவதும்-நடன அரங் கில்ஆடுவதும்-நாடக அரங்கில்நடிப்பதும் உண்மையல்லவே.ஒப்புமையே யன்றோ? குறவஞ்சிபோல் தீட்டப்பட்ட ஒவிய மும்-அவளைப் பார்த்துப் பிடித்த புகைப்படமும்-அவள் போல் செதுக்கப்பட்ட சிற்பமும்-செய்யப்யட்ட சிலையும் பொம்மையுருவமும் உண்மையல்லவே-ஒப்புமைகள் தாமே! எனவே, இசை,நடனம், நாடகம்,நாட்டிய நாடகம், திரைப் படம், ஒவியம், புகைப்படம், சிற்பம், சிலை, வார்பப்டம், பொம்மை, கம்மியம், ஒப்பனை (அலங்காரம்) முதலிய கலைகளின் தாய்க்கலை ஒப்புமைக்கலையே என்பது தெளிவு

(6) ஈண்டு சிறப்பாக ஒவியக்கலையை எடுத்துக் கொள்வோம். ஒவ்வுவது ஒவியம், ஒவ்வுவது என்றால் ஒத்தி-