பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/174

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

இஃது இற்றைக்கு மூவாயிரம்(கி.மு. 1000) ஆண்டுக்கு முற் பட்டது, இந்தப் பழம் பெரு நூலில் ஒப்புமைக்கலை சிறப் பிடம் பெற்றுள்ளது.'ஒப்புமை குறித்து முன்னோர்கள் இவ் விவ்வாறு கூறியுள்ளனர்’ என்று தொல்காப்பியர் கூறியிருப் பதிலிருந்து, அவருக்கும் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே ஒப்புமைக் கலை தமிழில் சிறந்திருந்தது என உணரலாம். எனவே, தமிழ் ஒப்புமைக்கலையின் வயது ஐயாயிரத்திற் கும் மேற்பட்டதாகும் என உய்த்துணரலாம்.

மூன்று இலக்கணங்கள்:

(11) தொல்காப்பியத்தின் முப்பெரும் பிரிவுகளுள் முதலாவதான எழுத்ததிகாரத்தில் எழுத்துக்களைப் பற் றிய எழுத்திலக்கணமும் இரண்டாவதான சொல்லதிகாரத் தில் சொற்களைப் பற்றிய சொல்லிலக்கணமும், மூன்றாவ தான பொருளதிகாரத்தில் வாழ்க்கையைப்பற்றிய பொரு ளிலக்கணமும் கூறப்பட்டுள்ளன. இறுதியான பொருளதி காரத்திலேயே ஒப்புமிைக் கலை இடம்பெற்றுள்ளது.

. :12)’,( பொருளதிகாரத்தில் அகத்திணையியல், புறத் தின்ண்யியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப் பர்ட்டியல், உவமஇயல், செய்யுளியல், மரபியல் என ஒன் பது உட்பிரிவுகள் உள்ளன. இவ்வொன்பதனுள் முதல் ஐந்து இயல்கள் அகவாழ்வு-புறவாழ்வுஆகியஅகப்பொருள்புறப்பொருள்பற்றியன.மெய்ப்பாட்டியல் உள்ளத்துஉணர்ச் சிகளைப் பற்றியது. ஒப்புமை காட்டிக் கருத்து விளக்கம் செய்வது பற்றியது உவம இயல். செய்யுளியலோ, செய்யுள் இயற்றும் யாப்பு முறைகளைக் கூறுவது. இன்னின்ன பொருளை இப்படியிப்படி அழைப்பதுதான் மரபு என்று அறிவிப்பது மரபியல். இவற்றின் தொகுப்பே பொருள் இலக்கணமாகும். -