பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/183

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

181

முறையை ஆராய்ந்து செயல் படுத்தவேண்டும். இவ்வாறு எதிர்காலத்தில் ஒப்புமைக் கலை வளர்ச்சிக்குச் செய்ய வேண்டிய பணிகள் நிரம்ப உள்ளன. செய்வோமாக! உயர்க ஒப்புமைக் கலை!

கூத்துப் பகுதி

19. மன்றம்

முத்தமிழ்:

முத்தமிழ் என்னும் சிறப்புப் பெயர் தமிழ் மொழிக்கு உண்டு. இயல் தமிழ், இசைத்தமிழ், கூத்துத் தமிழ் என் பன தமிழின் மூன்று பிரிவுகள். இலக்கிய-இலக்கணம் சார்பானவை இயல் தமிழ் என்றும், இசை தொடர்பானவை இசைத் தமிழ் என்றும் இயம்பப்படுகின்றன. கூத்துத் தமிழோ நாட்டியம், நாடகம் என இருவகையினதாகக் கூறப்படுகிறது. -

கூத்துத் தமிழ்:

உள்ளத்து உணர்ச்சிகளை-கருத்துகளை உடல் உறுப்பு களால்(ஒலியுடன்) நடித்துக் காட்டுவதில் நாட்டியமும் நாடக மும் ஒப்புமை உடையன. இவற்றிடையே வேறுபாடாவது: ஒருவரே உடல் உறுப்புகளால் நடிப்பது நாட்டியம்; பலர் உரையாடலுடன் நடிப்பது நாடகம். நாட்டியத்திலும் ஒரு வர்க்குமேல் சிலர் அல்லது பலர் பங்கு பெறுவதும் நடை - முறையில் உள்ளது. இது 'நாட்டிய நாடகம்’ எனப்பெறும். எனவே, இப்போது கூத்துத் தமிழை நாட்டியம், நாடகம், நாட்டிய நாடகம் என மூவகையாகப் பிரிக்கலாம் போலும்!