பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

நீதிமன்றப் பகுதி

5.நாலடியார் ஆசிரியர் நக்கீரரா?

பெயர்க் காரணம்

நான்கு அடிகள் கொண்ட வெண்பாக்களால் ஆன நூல் ஆதலின், இந்நூல் ‘நாலடியார்’ எனப்பட்டது. இதில் நானூறு பாக்கள் உள்ளதால், இதனை நாலடி நானுாறு: என்றும் வழங்குவர். தமிழரின் மறைநூல் என்ற பொருளில் இது வேளாண் வேதம்’ என்றும் வழங்கப்படுகிறது. 'பதினெண் கீழ்க்கணக்கு' எனப்படும் சங்க காலம் சார்ந்த பதினெட்டு நூல்களுள் பெரும்பாலானவை நாலடி வெண் பாக்களால் ஆனவையாயிருப்பினும், இந்நூல் மட்டும் நாலடியார் என வழங்கப்படுவதிலிருந்து இதன் தொன்மை புலப்படுகிறது. இந்நூலுக்கு முதலில் நாலடியார் என்னும் பெயர் வைத்து விட்டதால், பின்வந்த நாலடிப் பாடல் நூல்கட்கு இப்பெயர் வைக்க முடியாமற் போயிற்று.

நூல் தொகுப்பு வரலாறு

மதுரையில் எண்ணாயிரம் சமண முனிவர்கள் ஆளுக்கு ஒரு பாடலாக எழுதி வைத்துவிட்டுப்போன எண்ணாயிரம் பனையோலைச் சுவடிகளை, என்னவோ குப்பை என்று எண்ணிப் பாண்டிய மன்னன் வைகையாற்றில் எறியச் செய்ய, அவற்றுள் நானூறு பாடல்கள் மட்டும் எதிர்த்து நீந்திக் கரையேறி வந்ததாகவும், அவற்றின் அருமையுணர்ந்து அவற்றைத் தொகுத்து நாலடியார்’ என்னும் பெயருடைய நூலாக்கியதாகவும் கதை கூறப்படுகிறது. ஆமாம்-கதையேதான் இது.