பக்கம்:கருத்தோவியம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 பண்டங்களின் உற்பத்தியைவிடக் கரன்சி நோட்டுகளின் உற்பத்தி இன்று இந்தியாவில் அதிகமாக ஆகியிருக்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது. 1966 லிருந்து 1972வரை இந்தக் காலக் கட்டத்தில் பணப் புழக்கம் (Money supply) இரட்டிப்பாக ஆகியிருக்கிறது. அதே நேரத்தில் விவசாயப் பண்டங்கள் போன்ற தேசிய ஆதாரப் பண்டங்களின் (National product of primary goods) உற்பத்தி 52 கோடி ரூபாயிலிருந்து 40 கோடி ரூபாய்க்குக் குறைந்திருக்கிறது. நோட்டு அடிப்பது, பணப்புழக்கம் இரட்டிப்பாக உயர்ந்திருக்கிறது. ஆனால் உற்பத்தி, தேசியப் பண்டங்களின் உற்பத்தி, 52 கோடியிலிருந்து 40 கோடி ரூபாயாகக் குறைந்துவிட்டிருக்கிறது. எனவே பண்டங்களின் உற்பத்திக்கும், அதிகமாக நோட்டு அடித்துக் குவித்தால் விலை உயருமா உயராதா கேள்விக்கும் நாம் பதில் சொல்ல வேண்டியவர்களாக கிறோம். என்ற ரு 1972 ஏப்ரல் 8-ஆம் தேதி 8.247 கோடியாக இருந்த பணப்புழக்கம். 1973 ஏப்ரல் 27-ஆம் தேதி 9. 545 கோடியாக உயர்ந்திருக்கிறது. அதாவது 16 சதவிகிதம் பணப்புழக்கம் உயர்ந்திருக்கிறது. .. இதை எல்லாம் கருதித்தான் அறிஞர் அண்ணா அவர்கள் நாட்டு வாட்டம் போக்கிட. நோட்டடித்தால் போதாது " என் என்று அன்றைக்கே தன்னுடைய தேர்தல் பிரகடனத்தைச் செய்தார்கள். அப்போது நாட்டு. நோட்டு என்று அடுக்குச் சொல் எழுதுகிறார் அண்ணா என் று சிலர் கேலி செய்தார்கள். கிண்டல் செய்தார்கள். இன்று அது எவ்வளவு பொருத்தம் என்பதை மக்களுக்கு, உலகத்திற்கு, விளக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் விலைவாசி உயர்ந்துவிட்டது என்று கூறி அன்று நாங்கள் மாநில சர்க்காரை எதிர்த்துப் போராட்டம் நடத்தவில்லையா என்று கேட்டார்கள். நடத்தினோம். னென்றால். அப்போது மத்திய சர்க்காரிலும், மாநில சர்க்காரிலும் ஒரே கட்சி ஆட்சி நடைபெற்றது. அட்போது இருந்த அமைச்சர்கள் மத்திய அரசைப் பற்றிச் சொல்கிற துணிவு ல்லாமல் இருந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கருத்தோவியம்.pdf/29&oldid=1702920" இலிருந்து மீள்விக்கப்பட்டது