பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

கருவில் வளரும் குழங்தை

சாதாரணமாகச் சேரும். கருப்பையின் வாய் வழியாகச் சிறிதளவு உட்புறமும் செல்லலாம். அங்கிருந்துதான் விந்தணுக்களின் பயணம் முன்னோக்கித் தொடங்குகிறது.

இவை எதற்காக அப்படி முன்னேறிச் செல்லுகின்றன? இத்தனை ஆயிரம் வேல் வீரர்களும் பிடிப்பதற் கான கோட்டை ஏதாவது அங்கிருக்கிறதா என்ன? ஆமாம்: அங்கு ஒரு கோட்டை இருக்கத்தான் செய்கிறது. அதைப் பிடித்து உள்ளே நுழைவதற்காகத்தான் அவற்றிற்கு அத்தனை வேகம்!

அந்தக் கோட்டைதான் அண்டம் (Egg). கருப்பையோடு சம்பந்தப்பட்டுள்ள சூல்பை (Ovary)யிலே உண்டாகும் ஓர் அணு அது. பெண் குறியின் படத்தைப் பார்த்தால் அதிலே இரண்டு சூல்பைகள் உண்டென்று தெரியும். ஒரு முறை கலவியின்போது வெளியாகும் விந்துவிலே லட்சக்கணக்கான விந்தணுக்கள் இருக்கின்றன என்று முன்பே கூறினேன். ஆனால்