பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

கருவில் வளரும் குழந்தை

இவ்வாறு பூரித்த அண்டம் பிரிவடைந்து கொண்டே மெதுவாக நகர்ந்து ஏழெட்டு நாட்களில் கருப்பையை அடைகின்றது. அந்தச் சமயத்தில் அதில் நூற்றுக்கணக்கான அணுக்கள் இருக்கின்றன. இவையெல்லாம் ஒரு விந்தையான ஒழுங்கில் அமைந்து உருண்டையாகத் திரண்டிருக்கின்றன. இவ்வணுக்களின் உள்பாகத்தில் குழந்தையாக வளரும் கருவின் முக்கிய அம்சங்கள் தென்படத் தொடங்குகின்றன.

இப்படித் திரண்டு வந்த அணுப் பந்து கருப்பையின் ஒரு பாகத்தில் குழி செய்து ஒட்டிக் கொள்ளுகிறது. இதுவரை அது தானாகப் பெருகி வளர்ந்துவந்தது. இனிமேல் அதற்கு உணவெல்லாம் தாயின் உடம்பிலிருந்து கிடைக்கும்.

(பூரித்த அண்டம் பிரிந்து) ஒரு அணுத் திரளாக இருக்கிறது. அதன் உள்பாகம் கருவாகவும் அதன் பலபாகங்களாகவும் அமைவதைப் படத்தில் காணலாம்.

மேலே இருக்கிற படத்தைப் பார்த்துவிட்டு இந்த அணுக்கூட்டம் பெரியதாக இருக்குமென்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் அப்படி ஒன்று மில்லை. கருவாக மாறிய அண்டம் இரண்டாவது வாரக் கடைசியில் ஒரு எள்ளின் அளவுதான்