பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7



பார்வை மெய் வாய் செவி கால் கைகளென்ற உருவமு மாகி

ரண்டாம் மாதம் முடிவதற்குள் பல உறுப்புக்கள் ஓரளவு நன்முக அமைந்துவிடுகின்றன. இம்மாதத்திலே கருவின் வளர்ச்சியும் வேகமாக நடைபெறுகிறது. சுமார் கால் அங்குல நீளமிருந்த கரு இரண்டாம் மாதக் கடைசியில் ஒன்றரை அங்குல நீளமாகிவிடுகிறது. கனமும் சுமார் 500 மடங்கு அதிகரிக்கிறது.

எப்படியோ இருந்த தலையும் முகமும் கீழே படத்தில் காட்டியவாறு மாறிப் பார்ப்பதற்கு ஓரளவு அழகாக அமைகின்றன.