பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பார்வை மெய் வாய் செவி கால் கைகளென்ற...

33


எப்படித் தொடங்கி எப்படி வந்து முடிகிறது என்பதை ஆராய்கிறபோது பெரியதோர் விந்தையாகத்தான் இருக்கும்.

முன்பு பக்கவாட்டில் இருந்த கண்கள் முகத்தின் முன்னல் வந்து சேர்ந்துவிடுகின்றன. மெது

வாக இமைகளும் வளர்ந்து கண்களை மூடிவிடுகின்றன. இரண்டாம் மாதக் கடைசியில் மூடிய இமைகள் மூன்று மாதங்களுக்குத் திறப்பதேயில்லை. ஆறாவது மாதத்தில்தான் மறுபடியும் திறக்கின்றன.

இரண்டாம் மாத முடிவிலே அல்லது மூன்றாம் மாத தொடக்கத்திலே குழந்தை ஆணா பெண்ணா என்று நிச்சயமாகத் தெரிந்துவிடுகிறது. தெரிந்து விடுகிறது என்றால் நமக்குத் தெரிந்துவிடும் என்று நினைதுக்கொள்ளாதீர்கள். கருவின் உடலமைப்பிலே பால் வேற்றுமைக்கான உறுப்புக்கள் ஏற்படுகின்றன என்றுதான் குறிப்பிடுகிறேன்.

3.