பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைச்சொல் விளக்கம்

59

ஒன்று இருந்தாலும் இருக்கலாம்: அல்லது ஒய் நிறக்கோல் ஒன்று இருத்தாலும் இருக்கலாம். ஏதாவது ஒன்று இருப்பது நிச்சயம்: இரண்டும் இருக்கா. ஆனால் முதிர்ந்த அண்டத்தில் எக்ஸ் நிறக்கோல் ஒன்று நிச்சயமாக இருக்கும்.

ஒய் நிறக்கோல் (Y Chromosome)-இதுவும் பாலை நிர்ணயிப்பது. இது மானிட இனத்தில் பெண்ணின் அணுவில் இருக்காது. ஆதலால் முதிர்ந்த அண்டத்திலும் இருக்காது.

நிறக்கோல் (Chromosome)-உயிரணுவிலே உள்ள நுண்ணிய பொருள். ரப்பரில் மெல்லிய நூலிழுத்து அதை நீளமாகவும், குட்டையாகவும் சிறுசிறு துண்டங்களாக வெட்டி வைத்ததுபோல் நிறக்கோல்கள் இருக்கும். மானிட அணுவிலே 24 ஜோடிகள் உள்ளன. ஆனால் முதிர்ச்சியடைந்த விந்தணுவிலோ அல்லது அண்டத்திலோ 24 தான் இருக்கும். ஆதலால் விந்தணுப் பாய்ந்து அண்டம் பூரித்துக் கருவாக மாறும்போது அதில் 24 ஜோடி நிறக்கோல்கள் அமைந்து விடுகின்றன.

கரு-Fetus

கருப்பை (Uterus)-பூரித்த அண்டம் இதில் தங்கித் தான் கருவாக 9 மாதம்வரை வளர்கின்றது. இதற்கு மூன்று வழிகள் உண்டு. ஒரு வழி யோனியிலிருந்து வருவது. இதன் வழியாகத்தான் கலவியின்போது யோனியிற் சேர்ந்த விந்தணுக்கள் உள்ளே நுழைகின்றன. மற்ற இரு வழிகளும் இரு சூல் பைகளிலிருந்தும் மாறிமாறி அண்டம் வருவதற்காக ஏற்பட்டவை. மாதவிடாயின்போதெல்லாம் கருப்பையின் உட்புறச் சுவர் சிதைந்து புதிய இழையத்தால் மறுபடியும் அமையும். இவ்வாறு அது என்றும் புதிதாகவும் இளமையோடும் இருக்கும்.

கருக்குடை (Placenta)-கருப்பையின் உட்புறச் சுவரில் ஓரிடத்தில் குடைந்துகொண்டு பூரித்த அண்டம் வளரத் தொடங்குகிறது. அது ஒரு அணுப் பந்தாக இருக்கிறதல்லவா ? அதன் மேற்பாகம் மெதுவாகக் கண்ணாடிபோன்ற பையாக மாறுகிறது. அதுதான் பனிக்குடம். இப் பனிக்