பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

கருவில் வளரும் குழந்தை

1. விந்துச் சுரப்பி, 2. விந்து நாளம், 3) விந்துப்பை, 4. சிறுநீர்ப்பை, 5, சிறு நீர்ப் புறவழி, 6. பிராஸ் டேட் சுரப்பி

சேர்க்கை அவசியம் என்ற உண்மை அனைவருக்கும் தெரிந்ததே. கலவியின்போது வெளிப்படும் விந்துவிற்கும். கருத் தரிப்பதற்கும் சம்பந்தமுண்டு என்பதும் தெரிந்த உண்மையே.* ஆதலால் முதலில் கருவிற்குக் காரணமாகவுள்ள ஆண் பெண்களின் உறுப்புக்களைப் பற்றியும் அவற்றின் தன்மைகளைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

ஆண் குறியின் பல பாகங்களைப் படத்திலே காணலாம். நம் உடம்பிலே உள்ள பல உறுப்புக்கள் பிறந்தது முதல் தொழில் செய்யத் தொடங்குகின்றன. கண் பார்ப்பதற்கு உதவுகிறது. காது கேட்பதற்கு உதவுகிறது. இவை யெல்லாம் பெரும்பாலும் தோன்றி


  • ஆண் பெண் சேர்க்கையில்லாமலேயே கருவுண்டாக முடியுமா என்று காண ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. முயல் போன்ற பிராணிகளில் அவ்வாறு செய்ய முடிகின்றது என்று கூடச் சிலர் கூறுகிறார்கள். மனிதக் கருவை இம் முறையில் யாரும் இதுவரை உண்டாக்கவில்லை.