பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

 நாகரிக மினுக்குச் சுடர் தெறித்தது. டிரான்ஸிஸ்டர் மூலையில் அடங்கியது; குரல் அடங்கவில்லை.

சிவஞானமும் விஜயாவின் கணவனும் பரஸ்பரம் வணக்கம் சொல்லிக்கொண்டார்கள்.

“உங்க பேர்...” என்று இழுத்தான் சிவஞானம்.

“மிஸ்டர் சபேசன் ...” என்று இடைமறித்தாள் விஜயா. களி துலங்கச் சிரித்தாள். துடித்த மார்பகத்தில் தங்கத்தாலி பளிச்சிட்டது.

மல்லிகாவுக்கு அச்செயல் வியப்பை அளித்திருக்கவேண்டும். புருஷன் பெயரை இப்படி வெட்கமில்லாது சொல்லுதே, இந்தப் பொண்ணு!’ என்று மல்லிகா அதிசயப்பட்டிருக்க வேண்டும்!

“இவங்கதான் உங்க சம்சாரமா ?” என்று வினவினாள்.

“ஆமாம்,” என்றான் சிவஞானம்.

“மல்லி, இதுதான் விஜயா என் மாமா பெண். இதைப் பத்தித்தான் நான் உன்கிட்டே அடிக்கடி பேசுவேனே?” என்றான் சிவஞானம்.

‘ஊம்!’ -பூவிதழ் விரித்து, விரித்த இதழில் நாணம் அடக்கி, நளினமாக நகை காட்டி நின்ருள் மல்லிகா. கைவிரல் களில் சோற்றுமணிகள் ஒட்டிக் கிடந்தன.

“எங்க சிவஞானம் அத்தான் ரொம்பத் தங்கம்!...” என்று சபேசனை நோக்கிச் செப்பினாள் விஜயா. குளிர்ச்சிக் கண்ணாடியைக் கழற்றிவிட்டு நின்றாள் அவள்.

சபேசன் ‘காமிரா’வைத் தோள்பட்டையிலிருந்து எடுத்து, வலது உள்ளங்கைக்குள் அடக்கினான். “ஊம்!” கொட்டினான் அவன். இடது கை ‘பாண்டு’க்குள் அடக்கம்.

தூளியில் கண் வளர்ந்துகொண்டிருந்த குழந்தை, தன்னையும் அறிமுகப்படுத்திக் கொள்ள விழைந்தாற்போன்று மெல்ல அழுகை கூட்டத் தொடங்கியது.

குழவியை வாரியெடுத்து உச்சி மோந்தாள் விஜயா. “நீங்க கொடுத்துவச்சவங்க..!”

குழந்தை தாயின் பாலமுதம் அருந்திய பின்னரே அடங்கியது.