பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/153

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

147

விவரங்களையும் பூராவாகச் சொன்னார் அவனிடம். அவன் பெயருக்கு மாற்றுவதற்கான ரிஜிஸ்தர் பத்திரங்களிலே பாங்கு — சொத்து ஆகியவை சொல்லப்பட்டு, அடியில் பெரியவர் சோமசேகர் கையொப்பம் செய்திருந்தார். எல்லாவற்றையும் கண்ணோட்டமிட்ட அவனுக்கு எல்லாமே அதிசயமாக இருந்தன.

“இப்ப என்ன வந்துட்டுது இதுக்கெல்லாம் ! உங்க ஜீவிய காலத்திலே இப்படிப்பட்ட ஒரு மாறுதலுக்கு இப்போது என்ன வந்துட்டுதுங்க ?” என்று குறுக்கிட்டான் அவன்.

“எனக்கு என் முடிவு தெரியும் தம்பி! ஆகவேதான், திட்டமிட்டு இப்படிப்பட்ட முன்னேற்பாடுகளைச் செய்ய முனைஞ்சேன்!” என்று காரணத்தைக் காட்டினார்.

அவர் பேச்சு மேலும் புதிராக இருந்தது. அவர் பேசாமல் ஒரு பத்திரிகையை அவனிடம் நீட்டினார்.

ஞானபண்டிதன் அதைப் பார்த்தான். அது ஒரு மஞ்சள் பத்திரிகை. பூவழகியையும் ஞானபண்டிதனையும் சம்பந்தப்படுத்தி, ரசக் குறைவான தாக்கல்கள் எழுதப்பட்டிருந்தன. பூவழகி பண்பு கெட்ட பெண் என்றும் கொட்டை எழுத்துகளில் அச்சாகியிருந்தன.

ஞானபண்டிதன் அந்தப் பத்திரிகையைப் படித்துவிட்டு, பிறகு அதை அப்படியே சுக்கல் நூறாகக் கிழித்துத் தீக்குச்சியை உரசிப் பற்ற வைத்தான். “அப்பா ! இதெல்லாம் பொய்!... இப்படிப்பட்ட ரசாபாசமான விஷயங்களைப் பொது மக்கள்கிட்டே சொல்லி, வேசிப் பொழைப்பு நடத்திற இந்த மாதிரி மஞ்சள் பத்திரிகைகளை அரசாங்கம் தடை செய்யணும். சீக்கிரமே செய்திடுவாங்க! இம்மாதிரி அபலைப்பெண்ணுங்களைப்பத்தியெல்லாம் இல்லாததையும் பொல்லாததையும் சொன்னால் , அதனாலே அவங்களோட எதிர்கால வாழ்க்கை பாழாகிடுமே என்கிற இரக்க குணம்கூட அற்றுப்போன மிருகங்கள் இவர்கள் !... அப்பா ! இதை நீங்க பெரிசாக எடுத்துக்கிட வேணாம்! ... நான் என் பூவழகியை நம்புகிறேன்! ... அது போதும் எனக்கு! இந்த ஒரு உண்மையின் நிலைமைதான் எனக்கும் சரி, என்னோட பூவழகிக்கும் சரி —