பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/154

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

ஆதாரம், காப்பு, உயிர் எல்லாம்!... முரட்டுப் போக்கிரி செங்கோடன்தான் இந்த அற்ப வேலையைச் செஞ்சிருப்பான் ! பாவம் !...” என்று ஒரே மூச்சில் பேசினான் ஞானபண்டிதன்.

‘டக்’கென்று அங்கே தோன்றினாள் பூவழகி, அவள் எல்லா நடப்பையும் கேட்டுக்கொண்டிருந்திருக்க வேண்டும். அவளது மனத் துய்மை அவளது முககாந்தியில் பளிச்சிட்டது. திலகமும் மஞ்சளும் பூவும் அவளுக்கு வாய்த்திட்ட அருமை பெருமையாகவும் விளங்கின.

“ஐயா...!” என்று அழைத்தாள் பூவழகி.

பெரியவர் சோமசேகர் நிமிர்ந்தார்.

அவரது பாதங்களைத் தொட்டு வணங்கினாள் அவள். “ஐயா ! நீங்க என்னோட புனிதத்தை நம்பி அங்கீகாரம் செஞ்சாத்தான் நான் இங்கே இருக்க முடியுங்க! ...” என்று வெகு கம்பீரமான உண்மைத் தெளிவுடன் சொன்னாள்.

“உன்னை நம்பலேன்னா, நான் தெய்வத்தை எப்படியம்மா நம்புவேன்? ... நடப்பைச் சொன்னேன் இவன் கிட்டே. அவ்வளவுதான்!” என்று உணர்ச்சிப் பெருக்குடன் ஆதரவான குரலில் சொன்னார் அவர்.

“மாமா!” என்று ஆனந்தக் குரலில் கூவினாள் பூவழகி.

பிறகு, “உங்களைப் பார்க்கிறதுக்கு ஒருவர் வந்திருக்காருங்க!" என்றாள் பூவழகி.

“வரச் சொல்லம்மா !” என்றார் அவர்.

வெளிப்புறம் போய்த் திரும்பினாள் பூவழகி.

யாரோ ஒரு நபருடன் அவள் தொடர்ந்து வந்தாள்.

அந்த மனிதர் ஆடம்பரமாக உடுத்தியிருந்தார். பட்டுச் சட்டை மின்னியது. ஆனால், அவர் முகத்திலே — கன்னங்களிலே ஐந்து, விரல்கள் அப்படியே பதிந்துவிட்டிருந்தன.

“யார் நீங்க?”

அந்த மனிதர் பயம் மண்டிய மெளனத்திற்கு ஆட்பட்டு, விழி சோர, குற்றவாளியைப் போல உட்கார்ந்திருந்தார்.

அவரிடம் பூவழகி ஒரு கோப்பைக் காப்பியை நீட்டினாள். “ம்...சாப்பிடுங்க!” என்று பரிவுடன் கேட்டுக்கொண்டாள்.

அந்த மனிதர் ஏறிட்டு நிமிர்ந்தார். முகத்தில் வேர்வை சொட்டியது. சட்டையை இழுத்துவிட்டார். இளமீசை துடித்