பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

மழலையின் சிரிப்பு அவன் சிரிப்பில் அகம் பார்த்துக் கொண்டது.

குழந்தை இதற்கு முன் சிரித்த தருணங்களிலெல்லாம் அவன் உயிர்ப் பதைப்புடன் விக்கி விசித்து அழுத நிலைமைகளை அவனால் மறந்துவிட முடியாதுதான்.

இப்பொழுது அவன் சிரித்தான் ; மனம் விட்டுச் சிரித்தான். அவன் சிரிப்புக்குக் குழந்தையின் அழகுப் புன்னகை மட்டும் காரணமல்ல ; அவனுடைய மல்லிகாவும்தான் காரணம்!...

“மல்லி, உன் சிரிப்பை நான் முச்சூடும் பார்த்துக்கிட்டே —கேட்டுக்கிட்டே இருக்கலாம் போலத் தோணுது எனக்கு. அப்புறம் எனக்குப் பசி எடுக்கவும் மாட்டாது : ஆமாம் !” என்று சிவஞானம் உள்ளார்ந்த பெருமையின் பெருமிதத்துடன் தன்னைக் கொண்டவளைச் சிலாகித்துப் பேசிய பேச்சுக்களை அவன் எவ்விதம் மறப்பான் !

காஞ்சிபுரப் பட்டின் ஜரிகை முந்தியாக நாணமூரல் இழைத்து விளங்கிய அக்கனவின் கனிவுப் பொழுதுகளை அவன் எப்படி மறப்பான் ?

மல்லிகா இப்போது எங்கே போய்விட்டாள்?

ஏன் போய்விட்டாள் ?

பாவம் !...

பாவத்தையும் புண்ணியத்தையும் கூட்டுப்புள்ளி போட்டுக் கணக்கிடும் சாகஸத்தின் விதியை அவன் அறிய மாட்டானே, பாவம் !...

மஞ்சள் வெயில் அவனுக்கு முகத்தில் அடித்தது. எழுந்தான் ஜன்னல் கதவுகளை அடைத்துவிட வேண்டுமென்று நினைத்து எழும்பியவன், கொண்ட எண்ணத்தைச் செயற்படுத்தாமல் அப்படியே நின்றான்.

முதன் முதலாக மல்லிகாவை அழைத்துக்கொண்டு வந்து தஞ்சைப் பெரிய கோவிலையும் அரண்மனையையும் சரஸ்வதி மஹாலையும் காண்பித்துவிட்டு, இதே மாளிகையில், இதே அறையில் தங்கியிருந்த போது, இம்மாதிரியான மஞ்சள் வெய்யிலுக்குத் திரையிட முனைந்த் அவன் செய்கைக்கு மறுப்

க. ம-2