பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4


புனித அக்கினி

ரிந்த சிகரெட்டுகள் எரியாமல் உமிழ்ந்துகொண்டிருந்த புகைத்திரள் அப்போது சற்றே விலகியிருந்தது.

வெறியாட்டம் போட்டுக்கொண்டேயிருந்த வேதனையின் புகைச்சல் அச்சமயம் ஒரளவு அடங்கிவிட்டிருந்ததாகவே உணரலானான் சிவஞானம். அவன் கண்களை மூடி மூடித் திறந்தான். இமை வரம்புகள் ஒட்டி ஒட்டி விலகி, முத்தார்த் திருந்த நீர் முத்துக்களை விலக்கிவிட்டன. நெஞ்சைப் பிடித்துக்கொண்டு இருமினான். நெஞ்சு வலித்தது. களைப்பு மேலோங்கியிருந்தது. முகத்தின் வேர்வையை இயற்கைக் காற்றும் செயற்கைக் காற்றும்கூட அகற்றக்கூடவில்லை. இதயத்தின் கொதிப்புத்தான் அவ்வாறு வேர்வையாக மாறிக் கொட்டிக் கொண்டிருந்தது போலும் !

மேஜைமீது படியாமல் கீழ் முனையில் தொங்கி, காற்றில் பறந்துகொண்டிருந்த செய்தித்தாள், மேஜையின் மையத்தில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை அசைக்க முயன்றுகொண்டிருந்தது — வினையை அல்லது விதியை மனிதன் அசைக்கப் பாடுபடுவானே, அப்படி!

சிவஞானத்துக்கு உள்ளூர ஒரு கலவரம் ஊடாடியது. தாள் அக்கண்ணாடியை வீழ்த்திவிடுமே என்று பயந்தான். ஆகவே, எழுந்தமர்ந்துகொண்டிருந்த அவன், கட்டிலே விட்டுக் கீழே இறங்கினான். இறங்கின அவசரத்தில் மேல் வேஷ்டி பின்னிக்கொண்டது. சரிப்படுத்தக் கீழே குனிந்தான். விழுந்தது. பர்ஸ் எடுத்தான். வேஷ்டியை இழுத்துவிட்டுக் கொண்டு நிமிர்ந்தான். வட்டக்கண்ணாடி அவர் பார்வைக்கு இலக்கு ஆயிற்று. அவன் கைக்கொடிப் பொழுது அப்படியே

அயர்ந்து போனான்.