பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

"வேற நாதி ? - "கேட்டவரையே கேட்டான் அவன்.

"ரொம்ப ஜாக்கிரதையாய் இதுகளைக் கொடுக்கணும். கொஞ்சம்! தடுமாறினல் குழந்தைக்குத் தட்டேறிப்பிடுமே! ...” என்றார் அவர்.

அவரை சஞ்சலம் மிஞ்சப் பார்த்தான் அவன்.

"அப்படின்னா உங்க எதிர்காலத் திட்டம் என்ன ? உங்க குழந்தையை எப்படி வளர்க்கப் போறீங்க, மிஸ்டர்... ?”

சிவஞானம் தன் பெயரை அவரிடம் தெரிவித்துவிட்டு, ஒர் அரைக்கணம் அவரை ஆழ்ந்து நோக்கினான். "ஐயா, என் மனைவியோட இன்ப நினைவிலே காலத்தைக் கழிக்கிறதுதான் என் எதிர்காலத்திட்டம் !... குழந்தையை வளர்க்கிறதுக்கு ஒரு ஆயாவைத் தேர்ந்தெடுத்து நியமிக்கப் போறேன் ... நான் நாதியற்றவன் ஐயா !” என்றான் சிவஞானம். தன்னை வியப்புக் குறியுடன் அவர் ஜாடையாகப் பார்த்ததைக் கவனிக்கத் தவறிவிடவில்லை அவன்.

"சிவஞானம் !...” என்று அழைத்தார் ஈஸ்வரன். பிறகு, சற்று நேரம் சூன்யத்தில் தம் பார்வையை நிலைக்குத்தினார், தொண்டையைக் கனைத்துக்கொண்டார். அவரது கண்கள் ஏன் அப்படிக் கண்ணீர் பெருக்குகின்றன ? - "ராமசாமி, நாகம்மை, காமராஜ், ஜீவா !...” என்று கூப்பிட்டார் அவர்.

மறு வினாடி அவர் முன் குழந்தைப்படை ஒன்று 'ஆஜர்’ கொடுத்தது. "சிவஞானம், இத்தனை குழந்தைகளையும் விட்டுட்டு என் மனைவி செத்திட்டா!...” என்று தேம்பினார் ஈஸ்வரன்.

குழந்தைகள் ஒன்றுக்கொன்று விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தன !

"ஐயையோ என்று அலறினான் சிவஞானம். அவர் சற்று முன் பேசிய பேச்சில் தொக்கி நின்ற உட்பொருள் இப்போது அவனுக்குப் புரியத் தொடங்கிற்று. "இவங்களோட கதி ?” என்று கவலை மூள வினவினான் அவன்.

"இவங்களுக்கு ஒரு இர ண் டா வது அம்மாவை நியமிச்சேன் ... எனக்கு ஐம்பது வயசு ஆயிட்டுது. வேறே சிற்றின்ப நோக்கம் எதுவும் எனக்கு இல்லே! இந்தக் குழந்தைகளோட எதிர்காலத்துக் கோசரம்தான் இம்முடிவுக்கு