பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69

மிகுந்திருந்த பாலைப் புகட்டினாள் விஜயா பிறகு, ஏதோ நினைவு வந்தவளாக, "வசந்தி...வசந்தி"' என்று அழைப்புக் கொடுத்தாள் அவள்.

கூட்டம் கலைந்தது

ராமையா மட்டும் மிச்சம்!

'கன்னி இளம் மானாக' வசந்தி வந்து நின்றாள்.

"உட்கார் வசந்தி.’"

வசந்தி தரையில் ஒதுங்கி உட்காரலானாள்.

"அத்தான், குழந்தையைக் காப்பாற்றுகிற விஷயமாக இனி உங்க திட்டம் என்ன ?" என்று பரபரப்புடன் கேட்டாள் விஜயா.

நீண்ட நேரப் போராட்டத்தின் பேரிலே என் ராஜாவுக்கு ஒரு இரண்டாவது அம்மாவை நியமனம் செய்யப் போறேன். இதுவே என் மல்லிகா என்னிடம் வேண்டின வரமும்கூட;:இது சம்பந்தமாய், பட்டனத்துக்குப் போய், பேப்பரிலே ஒரு விளம்பரம் செய்யப் போறேன், விஜயா! நா தழுதழுக்கச் சொன்னான் சிவஞானம்.

"அப்படியா ?”

"ம்"!

"சரி, ராஜாவைக் கொஞ்சம் வாங்கிக்கங்க. வசந்தி, கொஞ்சம் வர்றீயா ?’ என்றாள் விஜயா. ".

பாப்பா தன் தந்தையிடம் வந்ததும், அழத் தொடங்கியது. அழுகையை அடக்கியாள முனைந்த உபாயங்கள் சரித்தன. "ஆராரோ.ஆரிரரோ !” என்று திரும்பத் திரும்பப் பாடினான் சிவஞானம்.

குழந்தை அழுகையை நிறுத்தினபாடில்லை.

அவன் பாட்டு அதற்குப்பிடிக்கவில்லையோ, என்னவோ?...

அவன் - சிவஞானம் தவித்தான்; - அந்தத் தவிப்பினுடே, மல்லிகா அழகு காட்டிக்கொண்டிருந்தாள் அவனுள்ளக் கிழியில். அப்புறம், ராமையர், ஈஸ்வரன், கலாவதி, விஜயா, வசந்தி முதலானோரும் தோன்றினார்கள். பின்னர், மல்லிகா மீண்டும் தனிப்படச் சிரித்தாள். அப்பால், விஜயாவும் தனியே நின்று புன்னகை புரிந்தாள். அப்புறம், கலாவதி சற்றுமுன்