பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

பணியாளின் தலை மறைந்ததும், மீண்டும் காந்திஜியின் படத்தை நெருங்கினார் சோமசேகர். படத்தின் உள் வசமாக இருந்த பொத்தான் ஒன்றை அழுத்தினர். கதவு திறந்தது.

கீழ்த்தட்டில் அவர் கையை நுழைத்தார்.

புகைப்படத் தொகுப்பு அட்டை வந்தது.

புரட்டினார்.

ஓரிடத்தில் அவர் பார்வை நிலைத்தது.

‘அன்னபாக்கியம் !...குழலி!...’ என்ற பெயர்களை உச்சரித்தார் அவர். குரல் நைந்தது. விழிநீர் வடிந்தது. நெடுமூச்சுப் பிரிந்தது. ‘அன்னபாக்கியம்! குழலி !’-எதிரொலி கிளம்பிற்று.

மறுவினா, விசை இயங்க, கதவு மூடப்பட்டது.

திரும்பினார் அவர். ‘அண்ணலே !...’ என்று பரிதாபமாக விளித்தவராக, கன்ணீரை ஒற்றினார் அவர்.

கைக்கடிகாரம் அவரைத் தூண்டிவிட்டது போலும் !

பலகாரத்தைச் சாப்பிட்டார்; காப்பி அருந்தினார். கீழ்த் தளத்தில் நேர் வசமாக அமைக்கப்பட்டிருந்த ஞானபண்டிதனின் போட்டோவை ஒரு முறை பார்த்துப் பரவசம் உற்றவராக, அங்கிருந்து நகர்ந்தார்.

“வேலப்பா !... தம்பி இன்னும் கொஞ்சம் நாழியிலே வந்திடும் !... எல்லாம் ரெடியாயிருங்க !... ” “ஆகட்டுமுங்க, பெரிய ஐயா !” என்று பணிவுடன் சொன்னான் வேலப்பன். “சின்ன ஐயா பெரும் படிப்பு படிச்சு மேலைச் சீமையிலேருந்து திரும்பி வார இந்தக் கண் கொள்ளாக் காட்சியைக் காணுறத்துக்கு அம்மாதான் இல்லீங்க !.. அவங்க மட்டும் இருந்திருந்தாக்க, அவங்களோட பெற்ற வயிறு நெறைஞ்சு போயிடுமே !” என்று முடித்தான் தினக்குரலில்.

சோம்சேகர் சமாளித்துக்கொண்டார்.

தொலைபேசி அழைத்தது.

சோமசேகர் பேசினார்.

தொழிற்சாலையின் நிர்வாகி பேசினார். நிர்வாகி சச்சிதானந்தமும் விமானக்கூடத்துக்கு வந்து விடுவார். இது பெரியவர் ஆணை.

‘ஸ்டாண்டர்ட்’ புறந்தது.