பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



2


மொட்டைத்தலை+முறுக்குமீசை!

றந்து வந்த விமானம் பாங்குடன் தளத்தில் இறங்கியது.

மீனம்பாக்கம் விழாக்கோலம் பூண்டிருந்தது.

சோமசேகர் இமை வலிக்க, விமானத்தையே நோக்கியவாறு நின்றார். அவர் மனம் இனம் விளங்காத மகிழ்வுடனும் இனம்புரிந்த நிம்மதியுடனும் எம்பி எம்பித் தணிந்தது.

அதோ, ஞானபண்டிதன்!

படர்ந்து வந்த கோலம் நிறை காலைக் கதிரவனின் பொன்னொளியில் குளித்த வண்ணம், ஞானபண்டிதன் படிகளைக் கடந்து இறங்கி வந்தான். ‘ஷார்க்ஸ்கின்’ அங்கி பளபளக்க, பூட்ஸ் ஒலி சரசரக்க, அவன் அழகே உருவமாக, உருவமே ஒர் அழகாக நடந்துவந்தான். அவன் பார்வை எதிர்வசமாக லயித்திருந்தது. மறுகணம், “அப்பா !...” என்று உணர்ச்சிப் பெருக்குடன் கூவி அழைத்தான்.

“தம்பி!” என்று பாசத்தின் நெருக்கத்துடன் ஞானபண்டிதனை வாரி எடுத்து அணைத்துகொண்டு ஆனந்தக் கண்ணீர் பெருக்கினர் சோமசேகர்.

நிர்வாகி சச்சிதானந்தம் கை கூப்பி, பெரிய மலர்மாலையை ஞானபண்டிதனுக்கு அணிவித்தார். பூச்செண்டையும் கொடுத்தார்.

“வா, தம்பி, போகலாம்!” என்று அழைத்தார் சோம சேகர்.

‘ம்’ கொட்டிக்கொண்டே அடியெடுத்து வைத்த ஞான பண்டிதன், பின்புறம் திரும்பினான்.

அப்போது, அவனை நெருங்கி வந்தாள். மேலைநாட்டு யுவதி ஒருத்தி. ‘டீக்’காக உடுத்தியிருந்தாள் அவள். ரோஜா இதழ்களை அவள் மேனியில் இடம் விடாமல் விரித்த மாதிரி