பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

அவனுக்கு அப்பேச்சு இதம் ஈந்தது.

சற்றுப் பொழுது ஒய்வு கொண்டிருந்தாள் ஸ்டெல்லா.

அவளை இப்போது பார்த்தான் ஞானபண்டிதன். டீக்கு அழைத்தான்.

ஸ்டெல்லா தன் டம்பப்பையைத் திறந்து முகம் பார்த்தாள்; உதட்டுச்சாயத்தை மறுபடியும் அப்பிக்கொண்டாள். பஞ்சில் பவுடரைப் பூசிக்கொண்டாள். அவனுடன் புறப்பட்டாள் அவள்.

இரண்டாங்கட்டில் ‘ரேடியோக்ராம்’ இருந்தது.

அழகு கொஞ்சும் மழலையைக் கண்டவுடன் தன்னாலேயே இதழ்களில் மென்முறுவல் இழையுமே, அது போன்று, அவள் ஆனந்தப் புன்னகை செய்தாள். ரோடியோகிராமை நெருங்கினாள். பொத்தான்கள் இயங்கின.

‘ஜாஸ்’ சங்கீதம் துலாம்பரமான சுவையுடன் புறப்பட்டது.

“தம்பி, டீ ரெடி !” என்று குரல் கொடுத்தார் பெரியவர்.

ஸ்டெல்லாவும் ஞானபண்டிதனும் ஹாலை அடைந்தனர். சாயா பரிமாறப்பட்டிருந்தது.

"நீங்கள் அருந்துங்கள், மிஸ்டர் ஞான்பண்டித்!” என்று ஆங்கிலத்தில் உபசரித்தாள் ஸ்டெல்லா.

“நான் உங்களை முதலில் உபசரிக்க வேண்டும். அதற்குள் நீங்கள் முந்திக்கொண்டுவிட்டீர்களே !” என்றான் ஞான பண்டிதன், ஆங்கிலத்தில்.

“இது பெண்களின் பொதுவான பழக்கம்; பாரம்பரியத் தொடர்புள்ள பண்பாடும்கூட !” என்று விமரிசனம் செய்தார் சோமசேகர்.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டபின், சோமசேகரரைப் பார்த்தனர்.

டீ முடிந்தது.

பெரியவருக்கு நன்றி நவின்றாள் ஸ்டெல்லா.

பிறகு, ஸ்டெல்லா இளம்புன்னகை பூத்த படி, ஞானபண்டிதனை சுவாதீனமாக நெருங்கினாள். “மிஸ்டர் ! உங்களுடைய சில கொள்கைகள் எனக்கு நிரம்பவும் பிடிக்கின்றன. குறிப்பாக, நியூயார்க்கில் அயல் நாட்டார் கலைக்