பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

அப்போது, ரேடியோவில் சிறு சலசலப்பு நிகழ்ந்தது, அதற்குப் பின் இமைப் பொழுதின் மெளனத்துக்குப் பிற்பாடு, “ரேடியோ சிலோன்...வர்த்தக ஒலிபரப்பு !”'என்ற அறிவிப்பு கேட்டதுதான் தாமதம், விரைந்தெழுந்த சோமசேகர் பதட்டத்துடன் ரேடியோவை ‘சடக்’கென்று நிறுத்தினார். வேர்வை வழிந்தது !

அவருடைய இந்தப் பதட்டமான பரபரப்புச் செய்கையை கண்டு, ஒன்றும் புரியாமல் அப்படியே சிலையாக வீற்றிருந்தான், ஞானபண்டிதன்! பிறகு, அவன் பார்வை அவர் பேரில் நிலைத்தது.

அவரோ, குனிந்த தலையை நிமிர்த்தவேயில்லேயே !...