பக்கம்:கற்சுவர்கள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி * {}3

டிரேடர்ஸ் சாமிநாதன் அவருக்கு வகையாக வலை விரிக்க

முடிந்திருந்தது. - -

அவ்வப்போது சீமநாதபுரம் :ெசிய ராஜாவாகிய விஜயராஜேந்திர சீமநபத பூபதியைச் சந்தித்து ஐயாயிரம் , பத்தாயிரம் என்று கடன் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்படிக் கொடுக்கும் கடன்களுக்கு அவ்வப்போது மகா ராஜாவிடமிருந்து பிராமிசரி நோட்டும் எழுதி வாங்கிக் கொண்டு வந்தார். - பணம் கிடைத்தால் போதும் என்ற தவிப்பில் இருந்த பெரிய ராஜா நோட்டின்மேல் நோட்டாக எழுதிக் கையெழுத்துப் போட்டுச் சாமிநாதனிடம் கொடுத்துக் கொண்டே இருந்தார். அவரால் செலவுகளைச் சுருக்கிக் கொள்ள முடியவில்லை. சோழியன் குடுமி சும்மா ஆடாது" என்பதுபோல் சாமிநாதனும் ஏதோ உள் நோக்கத்தை வைத்துக் கொண்டுதான் கேட்டபோதெல்லாம் ராஜா -வுக்குக் கடன் கொடுத்துக் கோண்டிருந்தார். இந்தக் கடனுக்குப் பதிலாக அங்கே சீமநாதபுரம் அரண்மனையில் நிறைந்து கிடக்கும் கலைச் செல்வங்கள் எல்லாம் கிடைத் தால் அவற்றின் மூலம் பத்து லட்ச ரூபாய்க்கும் மேலாக லாபம் சம்பாதிக்கலாம் என்று தனக்குத் தானே கனக்குப் போட்டுப் பார்த்து ஒரு மதிப்பீடு வைத்திருந்தார் அவர். பெரிய ராஜாவோ தம் மகன் பூபதிக்குத் தெரியாமவே சாமிநாதனிடம் அவ்வப்போது பெருந்தொகை கடன் வாங்கி வந்தார். கழுத்தளவுக்குக் கடன் ஏறிவிட்ட நிலைமை. - - -

அந்த ஆண்டின் இறுதிக்குள் பெரிய ராஜா ஏன்ஷி யண்ட் ஆர்ட் டிரேடர்ஸ் 'சாமிநாதனிடம் வாங்கிய கடன் பன்னிரண்டு லட்சரூபாய்வரை ஆகிவிட்டது, சாமிநாதனின் கூட்டு நனோடும் ஒழுங்கில்லாத ஒரு சில கெட்ட நண்பர் களின் தூண்டுதலாலும் பெரிய ராஜா சீம நாத் புடொக் ஷன்ஸ்" என்ற பெயரில் தாம் ஒரு புதிய சினிமாத் தயாரிப்புக் கம்பெனியை வேறு ஆரம்பித்துத் தொலைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/105&oldid=553077" இலிருந்து மீள்விக்கப்பட்டது