பக்கம்:கற்சுவர்கள்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 1.3.3

நினைவு வந்தன. டைரிகளை வைத்துவிட்டு அவன் தன். மணிபர்விலிருந்த சிறிய அளவிலான தாயின் புகைப் படத்தைத் தேடி வெளியே எடுத்தான். அவன் கண்களில் நீர் அரும்பியிருந்தது. உள்ளம் உணர்வுகளால் குமுறியது. அவனால் அப்போது உணர்வுமயமாவதைத் தடுக்க முடிய வில்லை. * . .

| 1

தனசேகரனுக்கு அப்போது தன் தாயின் மேல் ஏற் பட்ட பரிதாப உணர்வில்-மேலே எந்த வேலையையும் செய்வத்ற்கு ஒடவில்லை. மாமா எதற்காக அந்த டைரி களைப் படிப்பதற்கு உட்கார்த்தியிருந்தாரோ அந்த நோக் கமே கூட அவனுக்கு மறந்து ப்ோயிற்று. அவன் முற்றிலும் புதிய உணர்வுகளில் ஆழ்ந்து போய்விட்டான், தந்தையின் டைரிகளைப் படித்தபின் அவனுடைய உணர்வுகள் திசை இருப்பப் பட்டுவிட்டன. தந்தையின் மேல் இந்த விஷயங்க ளெல்லாம்.தெரிவற்கு முன்பு அவனுக்கு இருந்த வெறுப்பு இப்போது இன்னும் பல மடங்கு அதிகமாகி விட்டிருந்தது. அவருடைய புத்தி, கெளரவ நோக்கு, பெரிய மனிதத் தன்மை ஆகிய விேஷங்களை ஒவ்வொன்றாகக் கலைத்துக் குற்றவாளியாகத் தன் முன் நிறுத்தினாற்போலிருந்தது. புசுத்தோல் நன்றாக விலகிக் கண்ணெதிரே புலி தெரிவது போல் ஒரு பிரமை உண்டாயிற்று. என்றாலும் அந்தப் புலி செய்கிற அட்டுழியங்களையெல்லாம் செய்துவிட்டுத் தானே மூத்துத் தளர்ந்து இப்போது செத்துப் போய்

விட்டது என்பதும் ஞாபகம் வந்தது. -

ஆனால் மறுநாள் விடிந்தபோது மாமா அவனிடம் அரண்மனை வரவு செலவுக் கணக்கு விவரங்கள் பற்றி டைரிகளிலிருந்து அவன் ஏதாவது தெரிந்து கொள்ள முடிந் ததா என்று ஆவலோடு விசாரித்தார். .

.ه مستم تی و

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/135&oldid=553107" இலிருந்து மீள்விக்கப்பட்டது