பக்கம்:கற்சுவர்கள்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 1 5 I

இந்தச் சின்னஞ்சிறு மனசைச் சலனப் படுத்திவிடக்கூடாது. இந்த வாக்குறுதியை உங்களிடம் கேட்கவே நான் உங்களைத் தனியே சந்திக்க விரும்பினேன். இவன். கல்லூரிப் படிப்புக்குத் தயாராகி நினைவு தெரிகிற வரை இங்கே யாரும் இவனுக்குத் தாழ்வு மனப்பான்மை வரும்படி புண்படுத்திப் பேசவோ, குறைவுபடுத்திப் பேசவோ கூடாது. எந்த விதமான தடையும் இன்றி இவன் தன் படிப்பைத் தொடருவதற்கு எப்போதும் போல அரண்மனை உதவி கிடைத்து வரவேண்டும். அதே சமயம் அரண்மனையி விருந்து தனிப்பட்ட முறையில் எனக்கு எந்தவித உதவியும் வேண்டியதில்லை. நான் இந்தக் கோவிலில் தெளித்துப் பெருக்கிக் கோலம் போட்டாவது வயிற்றைக் கழுவிக் கொள்வேன். அரண்மனையிலிருந்து நீங்கள் மற்ற எல்லா இளையராணிகளையும் வெளியேற்றும்போது என்னையும் நிர்த்தாட்சண்யமாக வெளியேற்றி விடலாம்.'

இதைச் சொல்லும்போது அவள் குரல் கரக்ரத்தது.

கண்களில் நீர் மல்கியது. தனசேகரன் மனநிலையோ மிக மிக உருக்கமாக இருந்தது. மாமாவைப் போல ஒரு கறார்ப் பேர்வழியையும், காரியஸ்தரைப்போல அரண்மனை உள் விவகாரங்களைத் தெரிந்த ஒருவரையும் பக்கத்தில் வைத் துக்கொண்டு ஏற்கெனவே பொதுவாகத் தீர்மானித்துவிட்ட ஒரு முடிவுக்குப் புறம்பாக இவள் பையனுக்கு மட்டும் எப்படி ஒரு தனிச்சலுகையை வழங்குவது என்று தன சேகரன் யோசிக்கத் தொடங்கினான். அவன் யோசிப்பதை யும் தயங்குவதையும் கண்டு அவள், 'உங்கள் உடம்பில் எந்த இரத்தம் ஒடுகிறதோ அதே ராஜ குடும்பத்து இரத்தம் தான் இவன் உடம்பிலும் ஓடுகிறது. பெரிய ராணி-அதாவது உங்கம்மாவும் நானும் இந்த அரண்மனையிலே அக்கா தங்கை மாதிரிப் பழகினோமே தவிர, ராணியும் சக்களத்தியு மாகப் பழகலை. அதே போல நீங்களும் அண்ணன் தம்பி மாதிரிப் பழகனும்கிறது என் ஆசை. உங்கம்மா உடம்பு செளகரியமில்லாமப் படுத்திருந்த போதெல்லாம் நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/153&oldid=553125" இலிருந்து மீள்விக்கப்பட்டது