பக்கம்:கற்சுவர்கள்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 கற்சுவர்கள்

தனசேகரன் மனப்பான்மையினால் மிக மிக முற்போக் காகவும் அரண்மனை விஷயங்களில் படு செண்டிமெண்டலா கவும் இருந்தான். காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வை. யும் அதே மன நிலையில்தான் இருந்தார். மாமா தங்க பாண்டியனோ அரண்மனை விவகாரங்களை வெட்டு: ஒன்று துண்டு இரண்டாக முடித்துவிட்டுத் தனசேகரனின் கல்யாண ஏற்பாடுகளை உடனே தொடர்ந்துசெய்ய விரும்பி னார். அரண்மனை வரவு செலவுகள், விவகாரங்கள் முடிந் ததும் மலேசியாவுக்குக் கேபிள் கொடுத்துக் குடும்பத்தின ரையும் மகளையும் வரவழைத்துத் திருமணத்தை இந்தியா விலேயே முடித்து விட்டு ஒரு வரவேற்பு வைபவத்தை மட்டும் மலேயாவில் போய் வைத்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டிருந்தார். நாட்கள் தள்ளிப்போய் வீண் கால தாமதம் ஏற்படாமல் எல்லாவற்றையும் விரைந்து முடிக்க எண்ணினார் அவர் மாமாவின் அவசரத்தினால் அந்த அரண்மனையில் முகம் தெரிந்து தன்கு பழகிய பலருக்கு விரோதியாகி விடுவோமோ என்றுதான் காரியஸ்தர் பயந்: தார். அவர் ஆங்கிருந்து விலகிவிட விரும்பிய காரணமே அதுதான். தனசேகரனுக்கும் அது ஒரளவு புரிந்திருந்தது. இதற்கு நடுவே தங்கள் எதிர்கால நலனைப் பாதுகாக்க விரும்பிய விவரம் தெரிந்த சிலர் பாலஸ் வொர்க்கர்ஸ் யூனியன் பீமநாதபுரம் என்ற பெயரில் ஒரு டிரேட் யூனியன் அமைப்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்ற செய்தி யும் அவர்களுக்குத் தெரிந்தது. இதைக் கேட்டதும், மாமா காரியஸ்தர் இருவருமே யூனியன் அமைத்திருப்பவர்கள் மேல் கோபப்பட்டார்கள்.

'விசுவாசம்கிறதே போயிட்டுது. உப்பைத் தின்னுருக். கோம்கிற எண்ணமே இல்லையே?’ என்றார் மாமா.

'நீங்க சொல்றது தப்பு மாமா! விசுவாசமாயிருக் கணும்கிறது வேலை செய்யறவனுக்கு மட்டுமே வேணும்னு: நீங்க நினைக்கிறீங்க. அது வேலைக்கு அமர்த்திக்கிறவனுக் கும் கூட அவசியம் வேணும். உப்பைத் தின்னதாலே என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/160&oldid=553132" இலிருந்து மீள்விக்கப்பட்டது