பக்கம்:கற்சுவர்கள்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி I 63

சொல்லி முடியாது. வந்து இறங்கின நிமிஷத்திலிருந்து எல்லாச் செலவுக்கும் என் கைப் பணத்தைச் செலவு பண்றேங்கிறது உனக்கே தெரியும். நீயும் நானும் நமக் குள்ளே கணக்குப் பார்க்கிறவங்க இல்லை. நீ செலவழிச் சாலும் ஒண்ணுதான். ஆனாலும் இந்த அரண்மனை நில வரங்களைக் கட்டுப்படுத்தணும்னா உடனடியாகப் பல செலவுகளைக் குறைச்சே ஆகணும்: கருணையோ, தயவு தாட்சண்யமோ காட்டிப் பிரயோசனம் இல்லை:

"நீங்க சொல்றதெல்லாம் வாஸ்தவம்தான் மாமா! ஆனா இந்தப் பையன்விஷயம் ஜெனியுன் கேஸ். அப்பா வோட டைரிகளைப் படிச்சதிலேயிருந்து இவன் ஒருவ னுடைய படிப்புக்கான செலவை மட்டும் எக்காரணத்தைக் கொண்டும் நிறுத்தக் கூடாதுன்னு பட்டுது! அதனாலே தான் அதை மட்டும் அனுப்பச் சொன்னேன். இந்தப் பைய னோட அம்மா ஒருத்தி மாத்திரம்தான். உங்க சிஸ்டர்அதாவது எங்கம்மா-உயிரோட இருந்தவரை, அவளுக்கு ரொம்ப ஒத்தாசையா இருந்திருக்காங்க. மத்த இளைய ராணிக்ளெல்லாம் அம்மாகிட்ட அசல் சக்களத்திமார்கள் மாதிரியே பழகியிருக்காங்க. இவங்க மட்டும் ரொம்ப மரியாதையாகவும் கருணையாகவும் பழகியிருக்காங்க."

'நினைச்சேன்...ஏதாவது சரியான காரணம் இருந்தா லொழிய நீ இதை இவ்வளவு அவசரம் அவசரமாகச் செஞ் சிருக்க மாட்டேன்னு பட்டுது! உனக்கு தியாயம்னு தோணி நீ செய்திருந்தால் சரிதான். அதைப்பற்றி நான் மேலே பேசலே!' என்று ஒப்புக் கொண்டு விட்டார் மாமா. -

சிறிது நேரம் மாமாவும் அவனும் தங்களுக்குள்ளே பேச விஷயம் எதுவும் இல்லாததுபோல மெளனமாக அமர்ந்திருந்தார்கள். அப்புறம் மாமாதான் முதலில் அந்த மெளனத்தைக் கலைத்தார். - -

'தனசேகரன்! என்னால் இனி மேலும் காலதாமதம் செய்ய முடியாது. முந்தா நாள் சிலாங்கூர் சுல்தான் பிறந்த நாள் விருந்துக்கு நான் கோலாலம்பூரி ேஇருந்திருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/165&oldid=553137" இலிருந்து மீள்விக்கப்பட்டது