பக்கம்:கற்சுவர்கள்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 207

அரசாங்கம் தடுத்தது மிகமிகச் சரியான செயல் என்று: அவன் நினைப்பதற்கு அவன் தந்தையே சரியான நிரூபண மாக இருந்தார் என்று சொல்லலாம்,

நீண்டகாலமாகச் சென்னையிலிருந்த ராயல் மியூசிக் சொஸைடி என்ற ஒரு சங்கீத சபை அந்த ஆண்டில் தன் தந்தையின் முழு உருவப் படத்தைத் தனது ஹாலில் திறந்து வைக்கப் போவதாக வந்து தெரிவித்த போதுகூடத் தன் சேகரன் அதில் அவ்வளவாக உற்சாகம் காட்டவில்லை,

"உங்கப்பா ரொம்பக் காலமாக இதிலே பேட்ரனாக இருந்திருக்கிறார். அவர் நினைவா ஒரு படம் திறந்து வைக்கணும்னு எங்களுக்கெல்லாம் ஆசை. நீங்களே அரண்மனையிலேயிருந்து ஒரு நல்ல படமாக் குடுத்தீங் கன்னா செளகர்யமா இருக்கும். உங்கப்பா பெரிய கலா ரசிகர், சங்கீத அபிமானி. எங்க சொஸைடி அவராலே நிறையப் பிரயோஜனம் அடைஞ்சிருக்கு. அவர் படம் இல்லாதது எங்களுக்குப் பெரிய மனக்குறைதான்."

'அதெல்லாம் எதுக்குங்க? காந்தி படம் நேரு படம்னு: தேசப் பெரியவங்க படமாப் பார்த்துத் திறந்து வையுங்க போதும்.’’ என்று தனசேகரன் மெல்லத் தட்டிக் கழித்துவிட முயன்றான். அவர்கள் விடவில்லை. அவன் சொல்லியதை அவர்கள் அவன் மிகவும் தன்னடக்கமாகப் பேசுவதாக எடுத்துக்கொண்டு விட்டார்கள். அவனோ உண்மை யிலேயே தன் தந்தையின் மேலிருந்த கசப்பு உணர்ச்சி தாளாமல் அதைத் தட்டிக் கழித்துவிடும் நோக்குடன் பேசிக் கொண்டிருந்தான். அவர்களோ அதை வேறு விதமாகப் புரிந்து கொண்டு விடாப்பிடியாக மன்றாடினார்கள். -

'நீங்க அப்படிச் சொல்லிடப்படாது. தன்னடக்கம் கிறது உங்க குடும்பத்துக்குப் பரம்பரைக் குணம். உங்கப்பா படத்தை நாங்க திறந்து வைக்கப் போறோம்கிறது உறுதி. அதுக்கு நீங்க ஒரு நல்ல படமாகத் தேர்ந்தெடுத்துத் தர்ர" தோட நின்னுடப்படாது! .ெ தா டர் ந் து நீங்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/209&oldid=553185" இலிருந்து மீள்விக்கப்பட்டது