பக்கம்:கற்சுவர்கள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 கற்சுவர்கள்

ராஜா என்றோ நினைப்பதுகூட இல்லை. என்றாலும் பல விஷயங்களில் ராஜ துல்லிய குணம் என்று சொல்வார் களே அந்தத் தன்மை அவனிடம் அமைந்திருந்தது. எந்த' விஷயத்திலும் அவன் செய்வது, தெரிவிப்பது தெரிந்து கொள்ளுவது எல்லாம் துல்லியமாக இருக்கும்.

தாய்வழி மாமா தங்கபாண்டியனுக்கு தனசேகரன் மேல் அளவற்ற பிரியம். தன் அக்கா மகன் என்ற உறவு முறையையும் பீமநாதபுரம் சமஸ்தானத்தின் நேரடியான ராஜ வாரிசு என்ற கெளரவத்தையும் விட அவனுடைய கம்பீரமான தோற்றமும் எதிலும் அற்பத்தனமே இல்லாத பெருங்குணமும் அவரைக் கவர்ந்திருந்தன. நல்ல பழகும் முறைகளும் சிரித்த முகமும் தனசேகரனின் இயல்புகளாக இருந்தன. எல்லாவற்றுக்கும் மேலாகத் தனசேகரனின் தன்னடக்கத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். யார் யாரோ புதுப்பணக்காரர் வீட்டுப் பிள்ளைகள் எல்லாம் பணத் திமிரினாலும் செருக்காலும் 'மண்டைக் கணம் பிடித்து அலைகிற இந்த நாளில் தனசேகரின் தன்னடக்கம் பலரை ஆச்சரியப்பட வைத்தது. -

மாமா தங்கபாண்டியன் பீமநாதபுரம் சமஸ்தானாதிபதி யைவிடப் பெரிய பணக்காரர் என்பதும் மலேசியாவில் டத்தோ சிறப்புப் பட்டம் கொடுத்துக் கெளரவிக்கப் பட்ட பொது வாழ்க்கைப் பிரமுகர் என்பதும் அவரோடு வந்து த ங் கி யி ரு ந் த மருமகன் தனசேகரனுக்கும் செல்வாக்கை அளிக்கத்தான் செய்தன, என்றாலும் அப்படி ஒரு செல்வாக்கைத் தான் அண்டியிருக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் எல்லாரிடமும் எளிமையாகவும் வித்தியாசமின்றியும் மலர்ந்த முகத்தோடும் பழகினான் தனசேகரன். : . . - டத்தோ தங்கபாண்டியன் தம்முடைய மூத்த மகளைத் தனசேகரனுக்குத் திருமணம் செய்து கொடுப்ப தாகத் தம் அக்காவும் காலஞ்சென்ற பீமநாதபுரம் மூத்த ..ராணியுமான வடிவுடைய நாச்சியாரம்மாளுக்கும் வாக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/34&oldid=553006" இலிருந்து மீள்விக்கப்பட்டது